என் பேரன் கூட என்னை அப்படி பாத்துக்கல!. அஜித் பற்றி உருகும் விஸ்வாசம் பாட்டி!..
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் நுழைந்து உச்சத்தை தொட்டவர் அஜித்குமார். அமராவதி படத்தில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. துவக்கத்தில் சாக்லேட் பாயாக மட்டுமே நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். விஜயை போலவே இவருக்கும் அதிக ரசிகர்கள் உண்டு.
தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் இவருக்கு நிறைய ரசிகர்களை பெற்று கொடுத்தது. அந்த படங்களால் மாஸ் ஹீரோவாக மாறினார். விஜயின் போட்டி நடிகராகவும் மாறி அவருக்கு டஃப் கொடுத்தார். கடந்த 20 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் விஜய் - அஜித் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: லியோ வசூலையே கோட் தொட முடியல… ஜெயிலர்கிட்டன்னா வாய்ப்பில்லை ராஜா
ஆனாலும், இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. கோட் படத்தின் கதையை கூட வெங்கட்பிரபு அஜித்திடம் சொல்லி இருக்கிறார். அப்போது வாழ்த்து சொல்லி அனுப்பி இருக்கிறார் அஜித். அஜித் நடிகர் என்பதை தாண்டி அவரின் எளிமை பற்றியும், அவர் நடந்துகொள்ளும் விதம் பற்றியும் பலரும் சிலாகித்து சொல்வதுண்டு.
படப்பிடிப்பில் பெண்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார், மிகவும் நாகரீகமாக பேசுவார், காரை ஓட்டி வெளியே போனாலும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார் என பலரும் சொல்வதுண்டு. சினிமாவில் பைக் ஓட்டினாலும் ஹெல்மெட் அணிந்தே ஓட்டுவார் அஜித்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம்தான் விஸ்வாசம், இந்த படத்தின் அஜித்தின் மனைவியாக நயன்தாராவும், மகளாக அனிகா சுரேந்திரனும் நடித்திருந்தனர். அப்பா - மகள் செண்டிமெண்ட்டில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அஜித்தின் பாட்டியாக வருவார் சிட்டு குருவி பாட்டி.
ஒருகாட்சியில் ‘உன் முகத்துல சிரிப்பு இருக்கு.. ஆனா சந்தோஷம் இருக்கா?’ என கேட்டு உருக வைப்பார். இந்த பாட்டி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித் தம்பி மாதிரு ஒருத்தர நான் பார்த்ததே இல்ல. அவர் மாதிரி இன்னொருத்தர் பிறக்கப்போறதும் இல்ல. அவ்ளோ தங்கமானவர் அவர். என் பேரன் கூட என்னை அப்படி பாத்துக்கிட்டது இல்ல. விஸ்வாசம் ஷூட்டிங்கில் என்னை அப்படி பாசமாக அவர் பார்த்துக்கொண்டார்’ என உருகியிருக்கிறார் சிட்டு குருவி பாட்டி.