இதுக்கு விவேகமே பரவாயில்லையா.?! கதறும் ரசிகர்கள்.! இணையத்தை அதிரவைத்த வலிமை.!

by Manikandan |
இதுக்கு விவேகமே பரவாயில்லையா.?! கதறும் ரசிகர்கள்.! இணையத்தை அதிரவைத்த வலிமை.!
X

இன்று அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உலகம் முழுக்க பிரம்மாண்டமாக வெளியானது. அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியானது. முதல் காட்சி பார்த்தது முதல் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்களுக்கு வழக்கம்போல தனது ஆஸ்தான நடிகர் திரையில் தோன்றினால் போதும் என்று படம் வேற லெவல், சூப்பர் என்று பாராட்டி வருகின்றனர்.

ஆனால், மற்ற ரசிகர்கள் படத்தை பார்த்து படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருக்கிறது. அது படத்தை வெகுவாக பாதிக்கிறது. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் - எவளோ பெரிய இயக்குனர் அவர்.! கொஞ்சம் மரியாதை கொடுங்க A.R.ரகுமான் அவர்களே.!

இதற்கிடையில் ட்விட்டரில் #ValimaiDisaster என்று ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாக இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும், அந்த ஹேஷ்டேக் கீழே மற்ற சில இணையவாசிகள் இந்த வலிமை திரைப்படத்திற்கு விவேகம் திரைப்படம் எவ்வளவோ பரவாயில்லை என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மையில் வலிமை திரைப்படத்தில் என்னதான் இருக்கின்றது என்பதை நேரில் பார்த்தவர்கள் சொன்னால்தான் உண்டு. இல்லை என்றால் நாம் சென்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். விமர்சனங்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் அந்த படம் நமக்கு எப்படி இருக்கின்றது என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

Next Story