கொரோனா காலத்தில் பல மரணங்கள் ஏற்பட்டன. அதில் சில மரண செய்திகள் நம் மனதுக்கு இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், இன்னும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. அப்படி ஓர் செய்தி தான் ஜனங்களின் கலைஞன் நடிகர் விவேக் அவர்களின் மரணம் தான். இன்று வரை பலருக்கும் இவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறந்தாலும், இன்னும் இவர் காமெடிகளும், அதில் இவர் கூறும் அறிவுசார் கருத்துக்களும் எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தன் வேலை நடிப்பது மட்டுமே என்றில்லலாமல், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் அறிவுரை படி, மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை இலக்காக வைத்திருந்தார். ஆனால், அதனை முடிக்கும் முன்னரே இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
இதையும் படியுங்களேன் – அடுத்த ரவுண்டுக்கு தயாரான சமந்தா முன்னாள் கணவர்.! பொண்ணு யாரு தெரியுமா.?!
அவருடன் மிக நெருக்கமாக நீண்ட காலமாக பயணப்பட்டு வரும் நபர் என்றால் அது நடிகர் செல் முருகன். ஐவரும் விவேக் உடன் பல காமெடிகளில் வருவார். நேற்று மறைந்த நடிகர் விவேக் நினைவு தினத்தை முன்னிட்டு, செல் முருகன் மரம் நாடு விழாவை ஆரம்பித்து விவேக் சார் விட்டு சென்ற பாதையை தொடர்ந்து வருகிறார்.
தன் நண்பர் விட்டு சென்ற வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளார். தன் நண்பர் இறந்த பின்பும் அவர் தொடங்கிய நல பணிகளை வெற்றிகரமாக செய்து வரும் செல் முருகனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…