நடிச்சது ஒரே படம்...! ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகி...! பின்ன இந்த சிலையை கடத்திட்டு வந்தது விவேக் ஆச்சே...!
தமிழ் சினிமாவில் சின்னகலைவாணர் என்ற பெயரோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விவேக். தன்னுடைய சிந்திக்க வைக்கும் நகைச்சுவையால் ரசிகர்கள் அனைவரையும் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தவர். ஒரு நாள் அனைவரையும் அழ வைத்து விட்டு சென்று விட்டார்.
இவரது இழப்பு திரைத்துறைக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கும் தாங்க முடியாத ஒரு பேரிழப்பாகவே அமைந்தது. இவரது திரைப்பணியை தாண்டி பொது வாழ்க்கையிலும் சில நல்ல விஷயங்களை செய்து வந்தார். அப்படி இருக்கும் நடிகர் விவேக் தமிழ் சினிமாவிற்கு ஒரு அழகுச் சிலை போன்ற கதாநாயகியை அறிமுகம் செய்து வைத்த கதை தெரியுமா?
இதையும் படிங்கள் : எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல …! ஜெயம் ரவியிடம் வருத்தம் தெரிவித்த சிம்பு…!
ஆம். 1998 ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தின் நாயகியான மானு தான் அந்த நாயகி. அஸ்ஸாமை பூர்வீகமாக கொண்டவர் மானு. ஒரு டான்ஸ் ஷோக்காக வந்தவரை புகைப்படத்தில் பார்த்து காதல் மன்னனுக்கு இவர் தான் கரெக்ட் என்று அவரின் சம்மதம் வாங்க ரோடு ரோடாக அலைந்திருக்கிறார் நடிகர் விவேக்.
எதற்கு அசையாத மானு கடைசியில் மானுவின் வீட்டிற்கே சென்று அப்பாவிடம் கூறி அதன் மூலம் சம்மதிக்க வைத்திருக்கிறார் விவேக். அந்த ஒரு படம் தான் நடிகை மானுவிற்கு கடைசி படம் கூட. அந்த ஒரு படத்திலயே யாருடா இந்த சிலை? என்று சொல்லுமளவிற்கு ரசிகர்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்தார். பின் நடிக்க வாய்ப்புகள் வந்தும் சினிமாவே வேண்டாம் என்று ஓடி விட்டாராம். ஆனால் என்னை அறிமுகம் செய்த விவேக் சாருக்கு எப்பவும் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று நடிகை மானு தெரிவித்தார்.