கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் விவேக்கின் திடீர் இறப்பு அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் இறப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அறியப்படாமலே இருந்தது.
சின்ன கலைவாணர் விவேக் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு அங்கமாகவே இருந்து வந்தவர். காமெடி மட்டுமல்லாமல் அதில் சில சமூக கருத்துக்களையும் சொல்லி வந்தவர். தனது சொந்த வாழ்க்கையிலும் சமூகத்திற்கு தேவையானவைகளை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா இந்தியாவில் அதிகரித்து வந்தது. அப்பொழுது அதை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி கண்டு பலரும் பயந்தனர். இதை சரிப்படுத்த சின்ன கலைவாணர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எனப் பேட்டி கொடுத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அடுத்த சில தினங்களில் இறந்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கு குடிப்பழக்கம், கொலஸ்ட்ரால் என பல காரணங்கள் கூறப்பட்டது.
இந்நிலையில், அவரின் சசோதரி தனது தம்பி இறப்பு குறித்தும் அவரின் பழக்கவழக்கங்கள் குறித்து பேசி இருக்கிறார். அவன் கடவுள் கொடுத்த உடலை அவரிடம் அப்படியே நோய் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுக்கு எந்தவிதமான நோயும் இல்லை. சீரான இடைவேளையில் உடல் பரிசோதனை செய்து கொள்வான். 2015க்கு பிறகு நான்வெஜ் சாப்பிடுவதில்லை. ஏன் குறைவாக எடுத்துக்கொண்ட ஆல்கஹாலை கூட விட்டுவிட்டான்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…