Connect with us

கமல் படத்தில் விஜய்சேதுபதிக்கு மூனு ஜோடி?… மனுசனுக்கு மச்சம்யா!…

vijay sethupatih

Cinema News

கமல் படத்தில் விஜய்சேதுபதிக்கு மூனு ஜோடி?… மனுசனுக்கு மச்சம்யா!…

சமீபகாலமாக நடிகர் விஜய் சேதுபதி 2 கதாநாயகிகளுடன்தான் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சங்கத்தமிழன் படத்தில் ராஷிகா கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் என 2 ஜோடி அவருக்கு. துக்ளக் தர்பாரில் மஞ்சுமா மோகன், ராஷி கண்னா என 2 ஜோடி. லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சாய் தன்ஷிகா நடித்தனர்.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என அவருக்கு 2 ஜோடிகள். எனவே, அவரை பார்த்து சக நடிகர்களே ‘மனுசனுக்கு மச்சம்யா’ என மனுதுக்குள் பொருமி வருகின்றனர்.

vijay sethupathi

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஒரு அசத்தலான வேடத்தில் விஜய் சேதுபபதி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு பிரபலமான ‘ஷிவானி நாராயணன்’ ஜோடியாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது அப்படத்தில் மேலும் 2 ஜோடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னத்திரை நடிகை நந்தினி மற்றும் மகேஸ்வரி என 2 நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனராம். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top