நடிகர் திலகம் எந்தக் கதாபாத்திரங்களைக் கொடுத்தாலும் எளிதாக நடித்து அசத்திவிடுவார். அவருக்கு சவால் விடும் வகையில் பல இயக்குனர்களும் கதாபாத்திரங்களை அமைப்பார்களாம். அந்தப் பாத்திரங்களும் சிவாஜியின் பெயரைச் சொல்லாமல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையையே பெரிய அளவில் சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டு இருக்குமாம்.
அதைக் கண்டு சற்றும் மனம் தளராத நடிகர் திலகமோ அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவாராம். அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான் வியட்நாம் வீடு சுந்தரம். இவரது படங்களில் சிவாஜியின் கேரக்டர்கள் பற்றிப் பார்ப்போம்.
இதையும் படிங்க… ஒழுங்கா பாட்டு போடு.. இல்லனா?!.. இசையமைப்பாளரை மிரட்டிய ரஜினி!.. அட அந்த படமா?!..
நடிகர்களில் ஏராளமான கேரக்டர்களில் விதம் விதமாக நடித்து அசத்தியவர் யார் என்றால் அவர் நடிகர் திலகம் தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். அதனால் தான் அவரை சினிமாவின் அகராதி என்று சொல்வர். நடிகர்களில் யாருக்காவது ஒரு சீனில் நடிக்க முடியவில்லை என்றால் அதே காட்சிக்கு சிவாஜி எப்படி நடித்துள்ளார் என்று அவரது பழைய படங்களைப் போட்டு பார்ப்பார்களாம்.
அப்படிப்பட்ட நடிகர் திலகம் நடித்த ஒரு படம் தான் வியட்நாம் வீடு. 1970ல் பி.மாதவன் இயக்கத்தில் வெளியான படம். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்திருந்தார்.
சிவாஜியின் கேரக்டர்களில் மக்கள் மத்தியில் பிரபலமானவை இவை தான். பிரஸ்டீஜ் பத்மநாபன், பூண்டி மாதாக்கோயில் ஆன்டனி, பாரீஸ்டர் ரஜினிகாந்த், முதலாவது வியட்நாம் வீடு, அடுத்து ஞான ஒளி, அடுத்து கௌரவம்.
இதையும் படிங்க... வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..
ஒரு படத்துக்கு கதை எப்படி முக்கியமோ, அதை விட கேரக்டர் அமைப்பது ரொம்பவே முக்கியம்… ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரங்களை வடிவமைப்பது என்பது மிகவும் நுணுக்கமான விஷயம். அப்படி கேரக்டர்களை உருவாக்குவதில் கில்லாடி தான் வியட்நாம் வீடு சுந்தரம். கதாபாத்திரங்களை உருவாக்குபவர் வியட்நாம் வீடு சுந்தரம் என்றால் அதற்கு உயிர் கொடுப்பவர் சிவாஜி.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் நடிகர்களின் பெயர்களை டைட்டில் கார்டில் போட மாட்டார்கள். சப்பாணி, பரட்டை, மயிலு என்று கேரக்டர்களின் பெயர்கள் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…