அட சிலுக்கையே ஓவர்டேக் பண்ணிட்டாரே நம்ம வீஜே அஞ்சனா!. போட்டோ பாருங்க!..
Vj anajana: இப்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் நடிகைகள் போல கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவது ஃபேஷன் ஆகிவிட்டது. தாங்களும் நடிகைகளை போல பிரபலமாக வேண்டும். தங்களுக்கும் ரசிகர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசையாக இருக்கிறது.
அதோடு, அப்படி பிரபலமாகிவிட்டால் அதை வைத்த கல்லா கட்டிவிடலாம் என்பதுதான் கணக்கு. இதை பலரும் செய்து வருகிறார்கள். சினிமாவில் நடித்து வருபவர்கள். வாய்ப்பே இல்லாதவர்கள், சில படங்களில் மட்டும் தலை காட்டியவர்கள், சீரியல் நடிகைகள் என எல்லோருமே இதை செய்து வருகின்றனர்.
இதில் விஜே அஞ்சனாவும் ஒருவர். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் ரசிகர்கள் கேட்கும் பாடலை ஒலிபரப்பிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் ஆங்கராக மாறினார். பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணிபுரிந்திருக்கிறார். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் உண்டு. ஆனாலும் கட்டழகை கச்சிதமாக பராமரித்து வருகிறார். டிவி மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். பல நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடியும்.
ஒருபக்கம், இவரும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில், சிவப்பு நிற புடவையில் அழகை காட்டி அஞ்சானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.