அட... இப்படியும் ஒரு மனுஷனா? வாழைப்பூ வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண அஞ்சனா புருஷன்!

anjana
வாழைப்பூ கொடுத்து மனைவியை சமாதானம் செய்த கயல் ஹீரோ!
தொகுப்பாளினி அஞ்சனா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானார். ஸ்லிம் பியூட்டியாக ஹீரோயின் தோற்றத்தில் இருந்த அவரை எத்தனையோ இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க திட்டமிட்ட போதிலும் அதில் சிக்காமல் தொகுப்பாளினி வேலையை மட்டும் தொடர்ந்து செய்துக்கொண்டே இருந்தார்.
இவர் கயல் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் பருமனான அஞ்சனா அதன் பின்னர் உடல் எடையை குறைத்து ஒல்லியாகி மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிவிட்டார்.
இதையும் படியுங்கள்: நீயெல்லாம் ஒரு நடிகனே இல்ல!.. ஜெயம்ரவியை திட்டி தீர்த்த இயக்குனர்…
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தங்களது காதல் பயணத்தில் நடந்த ஸ்வாரஸ்யங்களை பகிர்ந்துக்கொண்டனர். அப்போது அஞ்சனாவுடன் சண்டை போட்டிருந்த சந்திரன் அவரை சமாதானம் செய்ய வழியில் எந்த பூவும் இல்லாததால் வாழைப்பூ வாங்கிச்சென்று சமாதானம் செய்துள்ளார். அந்த சம்பவத்தை கேட்டு அரங்கமே சிரித்தது.
Video Link: https://www.facebook.com/ZeeTamizh/videos/280367407271397/