உங்களை லவ் பண்றேன்...கல்யாணம் பண்ணிக்கலாம்..வி.ஜே அஞ்சனா கொடுத்த கூல் பதில்...

by சிவா |
anjana
X

பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

anjana

இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

anjana

இந்நிலையில், டிவிட்டரில் ஒரு ரசிகர் ‘உங்களை காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்வோம்’ என பதிவிட்டார். இதற்கு ‘புரோ நான் ஏற்கனவே திருமணம் ஆனவள். எனக்கு மூன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கிறான்’ என கூலாக பதில் சொன்னார். இதைக்கண்டதும் ‘நீங்கள் கமெண்ட்ஸ்களை படிக்க மாட்டீர்கள் என நினைத்துதான் பதிவிட்டேன். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்’ என பேக் அடித்தார் அந்த ஆசாமி..

அப்ப கமெண்ட் போட்டது யாருக்கு? என சிரிக்கிறார்கள் நெட்டிசன்கள்...

twitt

Next Story