வெளில க்ளாமர்..உள்ள பக்கா ட்ரெடிஷனல் காட்டும் விஜே அஞ்சனா..
அஞ்சனா ரங்கன் - சன்மியூக்ஸில் தனது கெரியரை தொடங்கினார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் ஆன ஃபீமேல் ஆங்கர். இவர் சன் தொலைக்காட்சியில் தனது வாய்ப்பை துவங்கி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே இருந்து புகழ் பெற்றவர்.
ஒல்லி பெல்லி அழகு, மாடர்ன் கேர்ள் தோற்றம், பவ்யமான பேச்சு என ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தமிழ் இளைஞர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதில் தலைகாட்டாமல் தொடர்ந்து ஆங்கராகவே இருந்து வந்தார்.
இதனிடையில் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கிட்டத்த்டட திருமணமாகி 7 வருடம் ஆன நிலையிலும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே உள்ளார்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில் மடிசார் அணிந்தவாறு தன் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.