சீரியல் நடிகருடன் காதலா? அதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா..ஓபனாக சொன்ன பிக்பாஸ் அர்ச்சனா

by Akhilan |
சீரியல் நடிகருடன் காதலா? அதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா..ஓபனாக சொன்ன பிக்பாஸ் அர்ச்சனா
X

Biggboss Archana: சீரியல் நடிகர் அருணை காதல் செய்து வருவதாக வெகு நாட்களாக இணையத்தில் உலா வரும் விஷயம் குறித்து முதல் முறையாக தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் விஜே அர்ச்சனா.

விஜேவாக இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் விஜே அர்ச்சனா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் அர்ச்சனா. பின்னர் சில ஆல்பம் சாங் நடித்திருக்கிறார். கடந்த சீசன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றார்.முதல் சில நாட்கள் அழுது கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..

அந்த நேரத்தில் பிரபல போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி கூட்டமாக சேர்ந்து எல்லோரும் வெளியேற்ற அதை தன்னுடைய ட்ரம்காடாக அர்ச்சனா பயன்படுத்திக்கொண்டார். பிரதீப்புக்கு தன் சப்போர்ட்டை கொடுத்து சரியான நேரத்தில் பேசத் தொடங்கியது அர்ச்சனாவின் புகழை வரிசையாக உயர்த்தியது. பெண் போட்டியாளர்களில் இரண்டாவது சீசனை தவிர எந்த வின்னர்களும் இல்லாமல் இருந்தனர்.

அதை உடைத்து, இரண்டாவது பெண் வின்னரும், முதல் வைல்ட் கார்ட் வின்னரும் அர்ச்சனா என்ற அடையாளத்தினை பெற்றார். இதுஒருபுறம் இருக்க, விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடிகர் அருணை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஒரே இடங்களில் இருவரும் புகைப்படங்களை வெளியிட்டதும், இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து கொண்டதும் வைரலாகி வந்தது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு எதிரா வெற்றிமாறன் செஞ்ச காரியம்! அடுத்து என்ன? வாடிவாசலுக்கு டாட்டாதான்..

ஆனால் இருவரும் இது குறித்து இதுவரை எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் ஒரு பேட்டியில் அர்ச்சனா அருண் குறித்து பேசி இருக்கிறார். அப்பேட்டியில் இருந்து, ரொம்பவே அறிவாளியான ஒருவருடன் நேரம் செலவழிப்பது எனக்கு ரொம்பவே பிடித்தமான விஷயமாக இருக்கிறது.

அருண் என்னுடைய சக நடிகர். அதனால் பார்த்துக் கொள்கிறோம் பேசிக்கொள்கிறோம். அதை தாண்டி மீதியெல்லாமே மக்களின் கற்பனை திறனால் வளர்த்தவைத்தான். எங்களைப் பற்றி உலாவும் வதந்திகள் குறித்து கூட நாங்கள் பேசிக்கொண்டது இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story