Biggboss Tamil 7
பெர்ஃபார்மன்ஸில் பின்னி எடுத்த அர்ச்சனா! கிடைத்த பாயிண்டை யாருக்கு விட்டுக் கொடுத்தார் தெரியுமா?
VJ Archana: பிக்பாஸில் நேற்று முழுக்க டான்ஸ் மாரத்தான் என்ற ஒரு டாஸ்க் நடைபெற்றது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு ஒரு சினிமா கேரக்டர் கொடுக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆட வேண்டும்.
பஸ்ஸர் அடிச்சதும் கார்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டேஜில் ஏறி நடனம் ஆட வேண்டும். அதுமட்டுமில்லாமல் டாஸ்க் முடியும் வரை அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருடனேயே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நிம்மதியே இல்ல! இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல – வேதனையை வீடியோ மூலம் பகிர்ந்த ஜி.பி.முத்து
அந்த வகையில் நிக்ஷனுக்கு காதல் கொண்டேன் காதல் கொண்டேன் தனுஷ் , மணிக்கு வாரணம் ஆயிரம் சூர்யா, விசித்ராவுக்கு நீலாம்பரி,தினேஷ் படையப்பா ரஜினி, அர்ச்சனா திமிரு ஈஸ்வரி போன்ற பல கேரக்டர்கள் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
இதில் அர்ச்சனா திருமி படத்தில் ஈஸ்வரி கேரக்டராகவே மாறியிருந்தார். டாஸ்க் முடியும் வரை அவர் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை. இது மற்ற போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது. சீரியல்களில் தன்னை வில்லியாகவே பார்த்த மக்கள் மனதில் இருக்கும் அந்த பிம்பத்தை உடைத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அர்ச்சனா இந்த பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே வந்தார்.
இதையும் படிங்க: வீடு வாங்கியும் நிறைவேறாம போன ஆசை!.. ரஜினிக்குள்ள இன்னும் அந்த சோகம் இருக்காம்!…
ஆனால் இந்த டாஸ்க்கிலும் வில்லி கேரக்டர்தான் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும் கச்சிதமாக நடித்து அனைவரையும் அசத்திவிட்டார். இறுதியாக சிறப்பான முறையில் பெர்ஃபாமன்ஸ் செய்த இரு போட்டியாளர்களில் அர்ச்சனாவும் தினேஷும் தேர்ந்தெடுக்கப்பட அதன் அடிப்படையில் இருவருக்கும் பாயிண்ட்கள் வழங்கப்பட்டன.
ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவில் வாய்ப்பை இழந்ததால் அந்த பாயிண்டை யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க கொஞ்சமும் யோசிக்காமல் பூர்ணிமாவுக்கு கொடுக்கிறேன் என கிடைத்த ஒரு பாயிண்டை பூர்ணிமாவுக்கு கொடுத்தார் அர்ச்சனா.
இதையும் படிங்க: ‘ஜிகர்தண்டா 2’ பற்றி கமெண்ட் அடித்த ஹாலிவுட் நடிகர்!.. நம்ம பயலுக பார்த்த வேலைய பாருங்க!…
இது பூர்ணிமாவிற்கே பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் விஷப்பாட்டில் மாயாவிற்கு பீதியை கிளப்பியது. மேலும் என்ன நடந்தது என இன்றைய எபிசோடில் பார்ப்போம்.