மாப்பிள்ளை இல்லாமல் நடந்த கல்யாணம்...! வில்லி நடிகை செய்த காரியத்தால் கலங்கி நின்ற புதுப்பெண்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் விஜே அர்ச்சனா என்பவர் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். இவரை சபிக்காத பெண்களே இல்லை எனும் அளவிற்கு வில்லத்தனத்தால் மிரட்டி வருகிறார். அனைவரும் பார்த்து திட்டி தீர்க்கும் ஒரு கேரக்டரில் நடித்து வரும் விஜே அர்ச்சனாவை தற்போது எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் உண்மையாகவே திட்டி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவரின் கேரக்டர் ஆழமாக பதிந்து போயிருக்கிறது.
சீரியலில் அடக்க ஒடுக்கமாக புடவை கட்டி கொண்டு வரும் அர்ச்சனா அரைகுறை ஆடையுடன் சமூக வலைதளங்களிலும் தனது வில்லத்தனத்தை காட்டி வருகிறார். விதவிதமான க்ளாமர் ஆடையில் ரசிகர்களை கவர்வதற்காக தனது புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.
மேலும் பாரதி கண்ணம்மாவில் பாரதி கேரக்டரில் நடிக்கும் நடிகர் அருணை இவர் காதலிப்பதாக செய்திகள் வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இவரின் வில்லத்தனமான சுயரூபம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சிக்காக ரெடியாகி கொண்டிருக்கும் நிலையில் புதுப்பெண் தோற்றத்தில் நிற்கும் ஒரு நடிகைக்கு மாப்பிள்ளை கட்ட வேண்டிய தாலியை இவரே போய் கட்டிருக்கிறார். இதை பார்த்ததும் அந்த நடிகைக்கு அதிர்ச்சியாகி விட்டது. இந்த வீடியோ இப்போ வைரலாகி கொண்டு வருகிறது.
முழு வீடியோ இதோ: