Connect with us
archana

Biggboss Tamil 7

இது வேற லெலல் பார்ட்டியா இருக்கும் போலயே! நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட டைட்டில் வின்னர் அர்ச்சனா

VJ Archana: விஜய் டிவியில் சமீபத்தில்தான் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது  பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். ரன்னராக மணிச்சந்திரா அறிவிக்கப்பட்டார்.

அர்ச்சனா டைட்டில் வின்னர் என அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் எங்கே மாயாவுக்கு அந்த டைட்டில் வின்னரை கொடுத்து விடுவார்களோ என்று எண்ணி ஒரு சில பேர் பயந்தே போனார்கள். அந்தளவுக்கு மாயா மற்றும் பூர்ணிமா மீது ஏராளமான ரசிகர்கள் கடுப்பில்தான் இருந்தனர்.

இதையும் படிங்க: சக்சஸ் நாட் அன் ஆப்ஷன்!… மஸ்ட்… மீண்டும் தரமான செய்கை!.. சிங்கப்பூர் சலூன் டிரைலர்…

அதுமட்டுமில்லாமல் மாயா புள்ளிங் என மாயாவை சுற்றி பூர்ணிமா, ஜோவிகா, அனன்யா, ஐஸ்வர்யா, நிக்‌ஷன் என ஒரு கூட்டமே இருந்தனர். ஒட்டுமொத்த கூட்டத்திற்கு ரசிகர்கள் புள்ளிங் என்றே பெயர் வைத்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவரைக்கும் இந்த மாயா கும்பலை பார்த்த அனைவரும் கடுப்பாகாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

அந்தளவுக்கு வெறுப்பேற்றி வந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும் சாமர்த்தியமாக பந்தாடினார் அர்ச்சனா. டாஸ்க்கில் அவரின் பங்கு மிகவும் குறைவு என்றாலும் அவர் நடந்து கொள்ளும் முறை, பழகும் விதம், பேசும் தோரணை என அனைத்தும் மக்களை கவர்ந்துவிட்டது.

இதையும் படிங்க: ஏகே63 படத்தில் அதிகரிக்கும் தெலுங்கு கூட்டம்!.. இது அந்த படம் மாதிரியே இருக்கே!… அதுச்சரி!…

அதனால் ஒட்டுமொத்த  தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார் அர்ச்சனா. இந்த நிலையில்தான் அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் கொடுக்கப்பட்டது. டைட்டில் வின்னரை பெற்றுக் கொண்டதோடு தன் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் அர்ச்சனா.

ஆனால் அது  பிக்பாஸ் வீட்டிற்குள் ஆடிய மாதிரி அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவில் நிக்‌ஷனுடன் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா ஆகிய நான்கு பேரும் தனுஷின் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C2PH5hjP0Xg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top