ரெட்ரோ விழாவில் விஜயை சீண்டிய தொகுப்பாளினி.. இத யாரும் கவனிக்கலயே

by Rohini |   ( Updated:2025-04-19 05:35:21  )
retro
X

retro

Retro: நேற்று சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ .இந்த படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி சிங்கம் களம் இறங்கிவிட்டது என சூர்யாவின் ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு ட்ரெய்லர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது .

கங்குவா திரைப்படத்தில் விழுந்த அடி அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என முயற்சித்து வருகிறார் சூர்யா. அதற்கு இந்த படம் தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பல விஷயங்கள் இந்த படத்தின் டிரைலரில் நம்மால் பார்க்க முடிந்தது. கார்த்திக் சுப்பாராஜ் படைப்பு என்றாலே ஒரு வித்தியாசமான படைப்பாக தான் இருக்கும்.

ஒரு கல்ட் படமாக தான் இருக்கும். அந்த வகையில் சூர்யாவை வைத்து ஒரு ஆக்சன் திரில்லர் படமாகத்தான் ரெட்ரோ திரைப்படத்தை எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். டிரைலரிலேயே டைட்டிலில் கார்த்திக் சுப்பாராஜின் படம் என்றுதான் போடப்பட்டிருந்தது. அதனால் இது முழுக்க முழுக்க இயக்குனரின் படைப்பாக தான் இருக்க போகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமார் பேசியதையே ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

அதை யாரும் கவனிக்காமல் போய்விட்டார்கள். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது சிவக்குமார் பேசியதை மட்டுமே கவனித்ததனால் பாவனா பேசியதை யாரும் கவனிக்கவில்லை. பாவனா சூர்யாவை பற்றி சொல்லும்போது இவர் திரையில் மட்டும் வரும் ரீல் ஹீரோ கிடையாது. நிஜத்தில் ஃபேமிலி மேனாகவே இருக்கும் ரியல் ஹீரோ என குறிப்பிட்டார் பாவனா.

இது மறைமுகமாக விஜயை தாக்குவதாக தெரிகிறது. விஜய் ரசிகர்கள் எப்படி சும்மா விட்டார்கள் என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார். ஒரு நடிகராகவும் குடும்பத்தை கவனிக்கும் ஒரு மனிதராகவும் சூர்யா எப்போதுமே ஒரே மாதிரி தான் இருந்து வருகிறார். ஏற்கனவே விஜய் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரையும் ஒன்றாக பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு வேளை பிரிந்து விட்டார்களா? அல்லது வேற எதாவது காரணம் இருக்கிறதா என விஜயை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. இப்போது பாவனா இப்படி பேசியதும் விஜய் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

Next Story