காதல் நாடகம்.....மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்த சித்ரா...! புது புரளியை கிளப்பிய மர்ம நபர்...

by Rohini |   ( Updated:2022-05-19 10:42:52  )
chithra_main_cine
X

சித்ராவின் தற்கொலையில் புது புது மர்மங்கள் தினந்தோறும் பூகம்பத்தை கிளப்பிக் கொண்டு இருக்கின்றன. சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் ஏராளமான தெரியாத விஷயங்களை சொல்லிவிட்டு பெரிய புரளியை கிளப்பினார். அந்த வகையில் சித்ராவிற்கு நிறைய பேருடன் தொடர்பு இருப்பதாகவும் அதை தெரிந்து கொண்ட ஹேம்நாத்தினால் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காகவும் தான் அவரை காதலிப்பது போல் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அரசியல் பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் சத்யா என்பவர் தெரிவித்துள்ளார்.

chithra1_cine

யார் இந்த சத்யா? ஏற்கெனவே விபச்சார வழக்கில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரியுடன் பழக்கத்தில் இருந்தவர். இவரது வேலையே அரசியல் புள்ளிகளுக்கு சின்ன சின்ன நடிகைகளை சப்ளை செய்வதுதான். இவருக்கும் ஏகப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருந்ததாம்.அரசியல் புள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் வரும் பணத்தில் ரியல் எஸ்டேட்டிலும் பிஸினஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சத்யாவுடன் ஹேம்நாத்துக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

chithra2_cine

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிரபலமானார் சித்ரா. அதன் பின் சித்ராவிற்கு சத்யாவுடனான நட்பு ஏற்பட்டதாம் கூடவே மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்தாராம். மேலும் கஞ்சா, செக்ஸ், குடிப்பழக்கம் என சகலமும் அனுபவித்துள்ளார் சித்ரா. இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்த ஹேம்நாத் வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காகதான் அவருடன் நெருக்கமானாராம் சித்ரா. ஹேம்நாத் இதுதான் வாய்ப்பு என்று எண்ணி சித்ராவுடன் உல்லாசமாக இருந்துள்ளாராம்.

chithra3_cine

இதையெல்லாவற்றையும் விட பல விஐபிகளுக்கு சித்ராவை ஹேம்நாத் அனுப்பி வைப்பார் என்றும் பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் சித்ராவை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் தற்சமயம் விடுப்பில் இருப்பதால் முன்பு அவர் கூறியபடி தூக்கில் தொங்கிய போது பின்னால் போட்டுக் கொண்ட முடிச்சை அவிழ்க்க சித்ரா முயற்சி செய்ததாகவும் அதனால் ஏற்பட்ட நகக் கீறல்கள் தான் அது என்றும் கூறியுள்ளார்.

Next Story