
Cinema News
கழுத்தை கடிச்சிருக்கான்.. என் பொண்ணு சாவுக்கு ஹேமந்த் தான் காரணம்.. விஜே சித்ரா அம்மா கண்ணீர் பேட்டி!
தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என விஜே சித்ராவின் அம்மா மற்றும் அப்பா தனியார் யூடியூப் சேனல்களுக்கு அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த விஜே சித்ரா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னப் பாப்பா பெரிய பாப்பா தொடரில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.
ஹேமந்த் உடன் விஜே சித்ராவுக்கு நிச்சயமான நிலையில், விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திடீரென விஜே சித்ரா தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர், ஹேமந்த்துக்கும் விஜே சித்ராவுக்கும் ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்து விட்டதாகவும் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், விஜே சித்ராவின் கொலையில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஹேமந்த் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பியது. மேலும், பலருடன் விஜே சித்ராவுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவரது ரூம் முழுக்க ஆணுறைகள் இருந்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின.
இந்நிலையில், விஜே சித்ராவின் அம்மா மற்றும் அப்பா தற்போது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது மகளின் சாவுக்கு காரணம் ஹேமந்த் தான் என்றும் சொந்த பெரியம்மா சொத்துக்கே ஆசைப்பட்டவன். பொய்யாக திருமணம் நடைபெற்றதாக அவசர அவசரமாக ரெஜிஸ்டர் மேரேஜ் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து இப்படி மோசம் செய்து விட்டான் என விஜே சித்ராவின் அம்மா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.
விஜே சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் ஹேமந்த் தான் அவரது கழுத்தில் கடித்துள்ளார் என்றும் தூக்குப் போட்டுக் கொண்டால், பின்னாடி மட்டும் எப்படி காயம் இருக்கும், மற்ற அறிகுறிகள் இல்லாதது ஏன்? போலீசார் தங்களை இந்த வழக்கில் அலைக்கழித்து வருகின்றனர் என்றும் தங்கள் குடும்பத்தில் இனி யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் ஹேமந்த் மற்றும் போலீசார் தான் என்றும் விஜே சித்ரா பரபரப்பாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் போலீசார் உரிய விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என விஜே சித்ராவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.