டக்குன்னு மேல கை வச்சிருவாங்க!.. விஜே ஜாக்குலின் பரபரபப்பு புகார்..
பாலியல் சீண்டல்கள் என்பது சினிமாவில் மட்டுமல்ல, தொலைக்காட்சி வட்டாரத்திலும் அதிகம் நடக்கிறது. எங்கெல்லாம் பெண்கள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கிறார்களோ அங்கெல்லாம் பாலியல் வன்முறைகள் மறைமுகமாக நடக்கவே செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ‘மீ டூ’ என்கிற ஹேஷ்டேக்கில் பல துறைகளை சேர்ந்த பெண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் தற்போது விஜே ஜாக்குலினும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களிடம் பிரபலமான விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஜாக்குலினும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். இவருக்கு என கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பி.எஸ்.சி விஸ்வல் கம்யூனிகேஷன் படித்தவர். மேலும், விமான பணிப்பெண்ணாகும் ஆசையும் அந்த பயிற்சியும் எடுத்தார்.
விஜய் டிவியில் சீரியல் நடிகையாகத்தான் இவர் நுழைந்தார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ஜாக்குலின் பிரபலமனார். அதன் பின் ‘ஆண்டாள் அழகர்’ தொடரிலும் நடித்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் இவர்தான் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயனின் தங்கையாக நடித்திருப்பார்.
இவர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில், உங்களிடம் ஆண்கள் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவம் நடக்குமா என கேள்வி கேட்க ‘அதை நான் கண்டிப்பாக சொல்லியே ஆகணும். சில நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட் என்கிற பெயரில் பிரபலங்கள் வருவார்கள்.
நடிகர் மட்டுமில்லாமல் சினிமாவில் வேறு துறையிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆங்கர் என்றாலே இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள். நம் மீது கை போடுவது, தொட்டு பேசுவது என நம்மை சங்கடபட வைப்பார்கள். சிலர் நம்மை தூக்கி சுற்றுவார்கள். நான் இப்படி செய்யட்டுமா என அனுமதி கூட கேட்க மாட்டார்கள்’ என வெடித்து தள்ளினார்.
இதையும் படிங்க: இவன் நமக்கு செட் ஆக மாட்டான்… ரஹ்மானை கண்டபடி திட்டிய பாரதிராஜா… ஆனா கிடைச்சதோ மாஸ் ஹிட் பாடல்!!