வீட்டுல விசேஷமுங்கோ!.. கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான செய்தி சொன்ன விஜே மணிமேகலை..!

manimegalai
விஜே மணிமேகலை சென்னையில் சொந்த வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்து இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே மணிமேகலை:
சன் மியூசிக்கில் தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட மணிமேகலை நான்கு சீசன்களில் கோமாளியாகவும், ஐந்தாவது சீசனில் தொகுப்பாளனியாகவும் கலக்கி வந்தார்.
இதையும் படிங்க: Coolie: ஏற்கனவே டஜன் கணக்குல இருக்காங்க.. இன்னும் ரெண்டு பேரா? ‘கூலி’ படத்தில் இணைந்த நடிகர்கள்
பிரியங்காவுடன் பிரச்சனை:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக 5-வது சீசனை தொகுத்து வழங்கி வந்தார் மணிமேகலை. அப்போது போட்டியாளராக கலந்து கொண்டிருந்த பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த நிகழ்ச்சியின் பாதியில் இருந்து இனிமேல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறி இருந்தார்.

manimegalai
இந்த சம்பவம் சமூக வலைதள பக்கங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாகவும், சிலர் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வந்தார்கள். இந்த சம்பவம் சிறிது நாட்களுக்கு சோசியல் மீடியாக்களில் பெரும் பேசுப்பொருளாக மாறி இருந்தது. அதனை தொடர்ந்து மணிமேகலை பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சியினையும் youtube நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

manimegalai
விஜய் டிவி பக்கம் வராத மணிமேகலை:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கோபத்துடன் வெளியேறிய மணிமேகலை பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார் என்று கூறி வந்தார்கள். ஆனால் மரியாதை இல்லாத இடத்தில் வேலை செய்யமாட்டேன் என்று அவர் கூறியிருந்ததால் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் இனி அவர் பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகின்றது.
வீட்டு கிரகப்பிரவேசம்:
விஜே மணிமேகலை இன்று சென்னையில் தனது சொந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களுடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'எங்கள் திருமணத்தின் முதல் நாளிலிருந்து எங்கள் பயணம் குறித்து நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

manimegalai
திருமணமான முதல் வருடத்தில் 10000 ரூபாய்க்கு வாடகை செலுத்துவதில் தொடங்கி சென்னையில் பிரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கும் வரை எங்களின் அனைத்து கனவும் நினைவானது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது உண்மையில் எங்களை வலிமையாக்கியது. நாங்கள் எங்கள் திருமண நாளை இந்த வாரம் கொண்டாடுகின்றோம்.
இதையும் படிங்க: Vidamuyarchi: எத்தன தடை வந்தாலும் சமாளிப்போம்.. விடாமுயற்சிக்காக களத்தில் இறங்கிய அஜித்
அதே சமயம் எங்களது புது வீட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த வீட்டை 2021 இல் முன்பதிவு செய்தேன். எப்போது இந்த வீடு எங்களுக்கு கையில் வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நாள் வந்துவிட்டது. நாங்கள் அந்த கனவுக்காக கடினமாக உழைத்தோம். கடவுள் இந்த நாளே எங்களுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றா'ர் என்று கூறி இருக்கின்றார்.