ரத்தன் டாடா கூட இப்படி அலப்பறை பண்ணல!.. புதுப்பணக்காரன் இர்பான்!.. அசிங்கப்படுத்திய விஜே பார்வதி!..

#image_title
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யூடியூபர் இர்பான் ஏழை மக்களுக்காக புடவை, வேஷ்டி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வழங்கிய போது அவர் மனிதர்களை நடத்திய விதமும் அவர்களை திட்டி பேசிய வார்த்தைகளும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இர்பான் செய்த செயலை பலரும் கண்டித்து வரும் நிலையில், விஜே பார்வதி இர்பானை விளாசியபடி பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் இர்பான் கையேந்தி பவன் முதல் பல கடைகள் வரை நேரில் சென்று விதவிதமான உணவுகளை உண்டு அதன் ருசி, தரம் மற்றும் விலையை பற்றி பேசி ஒரு வீடியோவாக வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதை தொடர்ந்து பல நடிகர்கள் நடிகைகளை இண்டர்வியூ எடுத்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது செலிபிரிட்டிகள் தனது படத்தை புரமோட் செய்யவதற்காக இர்பானை அழைக்கின்றனர். கடைசியாக மோகன்லாலின் எம்புரான் படத்தை கூட இவர் புரமோட் செய்தார்.
இர்பான் வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொண்டு ஜெண்டர் ரிவீல் என ஒரு நிகழ்ச்சியை நடத்தி தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கப்போகிறது என்பதை அறிவித்திருந்தார். வெளிநாடுகளில் இந்த விஷயம் சாதரணமாக இருந்தாலும் இந்திய நாட்டின் சட்டப்படி குற்றம் தான். இதற்காக சர்ச்சையில் சிக்கிக்கொண்ட இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பலரும் ஆதரவு தந்த நிலையில் அவர் அந்த வீடியோவை நீக்கி, தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் அவர், நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்காக வேட்டி, சேலை, பணம் ஆகியவற்றை வழங்கிய வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் மனிதர்களை நடத்திய விதமும் அவர்களை திட்டி பேசிய வார்த்தைகலும் இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவை பற்றி தனது கருத்தை முன் வைத்த விஜே பார்வதி, அவர் கூறும்போது, ”இவர் பெரிய ஜமீன் பரம்பர கார்ல இருந்துக்கிட்டே தான் சேவை செய்வாறு மனைவியை பாதுகாப்பாக வச்சிக்கணும்னா வீட்லயே விட்டுட்டு வந்திருக்கணும், ரத்தன் டாட்டா தான் வைத்திருந்த பெரும்பாலான சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்காக கொடுத்துவிட்டு இறந்தார் ஆனால் அதை பற்றி அவர் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை, புது பணக்காரனாலே இப்படிதான் அவனுக்கு அவ்வளவு தான் மூளை இவனை போன்றவர்களை புரமோட் செய்து நாடு நாசமாக போகிறது என தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.