இப்போதெல்லாம் நடிகைகள் மட்டுமல்ல. ஊடக மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடமும் பிரபலமாகி விடுவார்கள். அதற்கு காரணம் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் அவர்கள் பகிரும் புகைப்படங்களும் ரீல்ஸ் வீடியோக்களும்தான்.

Also Read
ஆனந்த விகடன் உள்ளிட்ட சில பத்திரிகைகளில் வேலை செய்தவர் பார்வதி. அதன்பின் பிரபல யுடியுப் சேனலின் ஆங்கராக மாறினார். வாலிப பசங்க மற்றும் பெண்களிடம் கிளுகிளுப்பான கேள்விகளை கேட்டு பதிலை வாங்குவதில் இவர் கில்லாடி. பொதுவாக எல்லோரும் விவாதிக்க தயங்கும் விஷயத்தை கையில் எடுத்து கேள்விகளை கேட்பார்.

இதன் மூலம்தான் பார்வதி பிரபலமானார். 70 கிட்ஸ் பார்வதிக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவதில்லை. விஜய் டிவி டிடி போல வரவேண்டும் என ஆசைப்படும் இவர் அவரைப்போலவே சினிமா பிரபலங்களிடம் பேட்டி எடுத்து வருகிறார்.

ஒருபக்கம், ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ள பார்வதி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வமுண்டு. குண்டான உடல், சோடாப்புட்டி கண்ணாடி அணிந்திருந்தாலும் அதையே அழகாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தாய்லாந்துக்கு ஜாலி டூர் போன விஜே பார்வதி அங்கு சட்டை பட்டனை கழட்டிவிட்டு ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.




