Categories: latest news

Survivor’ல் பாலியல் தொல்லை? “Napkin” சேன்ஜ் பண்றதுகூட கஷ்டம் – கலங்கிய பார்வதி!

கலாட்டா தமிழ் யூடியூபில் ஆங்கராக ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமானவர் பார்வதி. மதுரையை சேர்ந்த இவர் பேச்சு திறமையில் வல்லவர். மக்களிடம் நேரடியாக சென்று எக்குத்தப்பான பேட்டி எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

இவருக்கு ஜீ தமிழியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்துக்கொண்ட பார்வதி மக்களால் விமர்சிக்கப்படும் ஒருவராக பார்க்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அதன் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவரிடம் பாலியல் தொல்லை ஏதேனும் இருந்ததா? என தொகுப்பாளர் கேட்டதற்கு, அங்கு 6 அடியில் ஒரு பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்தில் தான் பாத்ரூம் போகணும் நாப்கின் மாற்றுவது கூட அங்கு ரொம்ப கஷ்டம் என கண்ணீர் மல்க கூறினார்.

Published by
பிரஜன்