பிரியங்காவுக்கு எதிரா போர்க்கொடி தூக்கிய பிரபலங்கள்! கடவுள் இருக்காரு குமாரு
Priyanka: விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. இப்போது அவருக்கு எதிராக பல பிரபலங்கள் போர்கொடி தூக்கி இருக்கின்றனர். அதற்கு முழு காரணம் மணிமேகலை. மணிமேகலை போட்ட ஒரு பதிவு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது .
அந்த அளவுக்கு பிரியங்காவால் மணிமேகலை மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகி இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுப்பதும் டாமினண்ட் செய்வதும், தான் சீனியர் என்பதால் தனக்கு அடிபணிய வேண்டும் என்பதாலும் தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்படுவதாக மணிமேகலை கூறி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார்.
இதையும் படிங்க: கூலி படத்தில் ரஜினி சம்பளம் இவ்வளவுதானா? விஜயிடம் இப்படி தோத்துட்டாரே!…
அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் பதிவு செய்திருந்தார் மணிமேகலை. இதிலிருந்து பிரியங்காவிற்கு எதிராக பல பிரபலங்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணிமேகலை போட்ட பதிவுக்கு பிரபல செய்தி தொகுப்பாளர் அனிதா சம்பத் ‘சரியாக சொன்னார் மணிமேகலை. இந்த மாதிரி கட்ஸ் அனைவருக்கும் வேண்டும்’ என பதிவிட்டு இருக்கிறார்.
இன்னொரு பக்கம் அனிதா சம்பத்தும் பிக் பாஸில் போட்டியாளராக இருந்த நிரூபும் நண்பர்களாக இருந்தார்கள். பிரியங்கா உள்ளே வந்த பிறகுதான் அவர்கள் நட்பில் ஒரு விரிசல் ஏற்பட்டு இப்போது அனிதாவும் நிரூபும் பேசிக் கொள்வதே இல்லை. இந்த ஒரு காரணத்தினால் கூட மணிமேகலைக்கு ஆதரவாக அனிதா அந்த மாதிரி ஒரு பதிவை போட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதையும் படிங்க: சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கேரக்டரில் நடிக்க இருந்தது முன்னணி பிரபலம்தான்… ஆனா?
இன்னொரு பக்கம் அமீரின் நெருங்கிய வட்டாரமான சாய்ஜியும் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவுக்கு எதிராகவும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். மேலும் கடவுள் இருக்கான் குமாரு என்றும் இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறேன் என்றும் சாய்ஜி கூறியிருக்கிறார். அதற்கு காரணம் அமீர் பாவனிக்கு இடையில் பிரியங்கா வந்து தான் எங்களிடம் இருந்து அமீரை பிரித்தார் என்பதைப் போல சாய்ஜி அந்த ஒரு பதிவை போட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.
இன்னொரு பக்கம் பிரபல பாடகி சுசித்ராவும் மணிமேகலைக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறும் போது பிரியங்கா எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா? அவளால அவள் கணவரின் வாழ்க்கையை ஸ்பாயில் ஆகிவிட்டது. பிரியங்காவின் கணவர் என்னுடைய தம்பி பையன் தான். வாழ்க்கையை சீரழிச்சிட்டா என்றவாறு சுசித்ரா பேசியிருக்கிறார். ஆக மொத்தம் பிரியங்காவின் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.
இதையும் படிங்க:ஷாரூக்கானை மிஞ்சிய விஜய்! இந்திய அளவில் முதலிடத்தை பிடிக்கும் தளபதி