என்னது விஜே பிரியங்காவுக்கு குழந்தையா? பேட்டியில் உண்மையை உடைத்து ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்!

0
148

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான விஜே பிரியங்கா தன்னுடைய பேட்டி ஒன்றில் என்னுடைய குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் எனக் கூறியிருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உருவாக விஜய் டிவி தான் காரணமாக இருக்கிறது. இந்த லிஸ்டில் தற்போது முதல் இடத்தில் இருப்பவர் விஜே பிரியங்கா. இவர் இல்லாத நிகழ்ச்சியே விஜய் தொலைக்காட்சியில்  இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவின் க்ரூப்பே அவரின் தோல்விக்கு காரணமாகியது.

அந்த சீசனில் ராஜூவிடம் தோற்று இரண்டாவது இடத்தினையே பிடித்தார். அதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார். வாய் மட்டுமில்ல வேலையும் நடக்கும் என்பதற்கு இணங்க ஒவ்வொரு வாரமும் மிரட்டி கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பிரியங்காவிடம் உங்களுக்கு சூப்பர் சிங்கர் பிடிக்குமா? ஸ்டார்ட் மியூசிக் பிடிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. என்னுடைய கேரியர் இவ்வளவு உச்சத்தில் இருப்பதற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் காரணம்.

ஆனால் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி என்பது என்னுடைய குழந்தை மாதிரி. அதை நான் தான் வளர்த்து ஆளாக்கி பெரிய இடத்தில் கொண்டு வந்து அமர வைக்க வேண்டும் என பேசி இருக்கிறார். அட ஒரு நிகழ்ச்சிக்காக இவ்வளவு பெரிய பில்டப் கொடுத்தீங்க என ரசிகர்களும் தற்போது அவரை கலாய்த்து வருகின்றனர்.

முதல் கணவரை பிரிந்து வாழும் பிரியங்கா விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்து வரும் நிலையில் இது குறித்து அவர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். இருந்தும் அவர் அம்மாவின் பிடிவாதத்தால் இன்னும் சில மாதங்களில் அவருடைய திருமண அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news