பாவனா விஜய் டிவியை விட்டு போனதுக்கும் அவங்கதான் காரணமா? வெடித்த விவகாரம்
VJ Bhavana: தற்போது விஜே மணிமேகலை போட்ட ஒரு பதிவு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சீசனில் தற்போது ஆங்கராக இருந்தவர் மணிமேகலை. அதற்கு முந்தைய நான்கு சீசன்களிலும் கோமாளியாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே அவர் விஜய் டிவியில் பல ஷோக்களில் ஆங்கராக பணியாற்றி இருக்கிறார். இந்த மீடியாவுக்குள் வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் வேறு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் எதிர் கொள்ளவில்லை என அந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கேரக்டரில் நடிக்க இருந்தது முன்னணி பிரபலம்தான்… ஆனா?
தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசனில் பிரபல பெண் ஆங்கர் குக்காக கலந்து கொண்டு வருகிறார். அவரால் தன்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வருவதாக மணிமேகலை புகார் அளித்திருக்கிறார். அதனால் எவ்வளவோ பேரு புகழ் பணம் சம்பாதித்தாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துதான் அதை எல்லாம் நான் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.
அதனால் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு நான் நிரந்தரமாக வெளியேறுகிறேன் என மணிமேகலை கூறியது அனைவரும் தரப்பிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்று செட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு வீடியோ மூலம் விளக்கமாக கூறியிருக்கிறார் மணிமேகலை. அந்த ஆங்கர் பல வருடங்களாக அந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: ஷாரூக்கானை மிஞ்சிய விஜய்! இந்திய அளவில் முதலிடத்தை பிடிக்கும் தளபதி
சீனியரான அந்த ஆங்கரிடம் மிகவும் பணிந்துதான் போக வேண்டும். பயந்து தான் போக வேண்டும். அவர் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற வகையில் தான் மணிமேகலையின் சூழ்நிலை இருப்பதாகவும் அப்படி இருந்துதான் நான் சம்பாதிக்க வேண்டும் என்பது எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் என பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
இவர் கூறியதிலிருந்து அவர் சொன்ன அந்த பெண் ஆங்கர் பிரியங்கா தான் என ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பிரியங்காவுக்கு சப்போர்ட்டா இல்லை மணிமேகலைக்கு சப்போர்ட்டா என்ற வகையில் ஒரு விவாதமே நடந்து வருகின்றது. இன்னும் சிலர் பிரியங்காவின் இன்னொரு முகம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
இந்த நிலையில் அதே தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே பாவனா. அவர் இப்போது இல்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்டர்நேஷனல் அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார் பாவனா.
பெரிய பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் அவருடைய நட்பு இருந்து வருகிறது. அவ்வப்போது சில பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் முன்பு ஒரு பேட்டியில் கூறியது இப்போது வைரலாகி வருகின்றது.
பாவனாவிடம் ஏன் விஜய் தொலைக்காட்சியை விட்டு வெளியே போனீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்டபோது அதற்கு பாவனா புதியதாக வந்த ஒரு ஆங்கரால் என்னுடைய கெரியர் ஸ்பாயில் ஆகிவிட்டது. அதனால் தான் எனக்கு அங்கு வேலை இல்லை என மறைமுகமாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் புதியதாக வந்த ஆங்கர் பிரியங்கா தான். அதையும் ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றனர்.