VJ Priyanka: இனி விஜய் டிவியில் பிரியங்காவுக்கு வேலை இல்லை… அதிரடி முடிவால் தான் திடீர் திருமணமா?

VJ Priyanka: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் விஜே பிரியங்கா இனி தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக சின்னத்திரை நடிகர்களுக்கு மட்டும்தான் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ஆனால் விஜய் டிவி இதற்கு மாற்று கருத்தை உருவாக்கியது. சீரியல்களால் அடைய முடியாத புகழை ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் தட்டி தூக்கியது.
ஜோடி நம்பர் ஒன் தொடங்கி சூப்பர் சிங்கர் என அதன் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் இன்றளவும் மிகப்பெரிய அளவில் பெரிய புகழை பெற்று இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தான்.
அப்படி சின்ன திரையில் பிரபல தொகுப்பாளர்களின் பட்டியலை எடுத்தால் முதல் ஐந்து இடத்தை விஜய் டிவியின் தொகுப்பாளர் தான் இடம் பிடிப்பார்கள். விஜே பிரியங்கா, மாகாபா ஆனந்த், நீயா நானா கோபிநாத் என இவர்களின் லிஸ்ட் அதிகமாகும்.

ஆனால் தற்போது இந்த தொகுப்பாளர்கள் எல்லாம் வெளியில் சில நிகழ்ச்சிகளை கலந்து கொள்வது ரசிகர்களுக்கு ஆச்சரிய ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரிக்கும் போது விஜய் டிவி தற்போது பிரபல நிறுவனமான இன்னொரு டிவி வசம் மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் விஜய் டிவியில் இன்னும் அரைத்த மாவை அரைக்கும் பல சீசன் கடந்து ஓடும் நிகழ்ச்சிகளை கைவிட முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரபல தொகுப்பாளர்களையும் டிவியை விட்டு நீக்க அவர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்களும் கசிய விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த லிஸ்டில் முக்கிய இடத்தில் இருப்பது நீயா நானா கோபிநாத் மற்றும் விஜே பிரியங்கா என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய நீண்டகால காதலரை நெருங்கிய உறவினர் மத்தியில் பிரியங்கா திருமணம் செய்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.