Cookwithcomali: பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அடக்குமுறையால் மணிமேகலை விலக இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து விஷயம் பரபரப்பானது. தற்போது குற்றம்சாட்டப்பட்ட பிரியங்காவிற்கு ஆதரவாக பிக்பாஸ் பிரபலம் களமிறங்கி இருக்கிறார்.
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது. தற்போது செமி பைனல் முடிந்திருக்கும் நிலையில் பிரி்யங்கா, சுஜிதா, இர்பான் ஆகியோர் பைனலிஸ்ட்டாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா
ஆனால் இந்த அறிவிப்பு கொண்டாடப்படுவதற்கு முன்னரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை பணம் புகழை விட சுயமரியாதை தான் முக்கியம் எனக் கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல் அவருடைய அறிவிப்பில் கூக்காக வந்த மற்றும் ஒரு பிரபல தொகுப்பாளனி என்னை வேலை செய்ய விடாமல் அடக்குமுறை செய்வதாகவும் ஓப்பனாக அறிவித்திருந்தார்.

இவர் விஜே பிரியங்காவை தான் கூறுகிறார் என்பது அப்பட்டமாக தெரிய ரசிகர்கள் அவருக்கு கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். மணிமேகலைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகியது. இது மட்டுமல்லாமல் பிரபலங்கள் சிலர் கூட மணிமேகலைக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கும் டாப் ஹீரோ! என்னடா இவருக்கு வந்த சோதனை?
இந்நிலையில் இன்று காலை இந்த சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா விஷயம் தெரியாமல் ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக மற்றவரை பேச வேண்டாம் என நீண்டதொரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளரும், பிரியங்காவின் நெருங்கிய தோழியுமான பவானி இந்த விவாகரத்தில் போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. பிரியங்கா விடம் இருப்பது அடக்குமுறை அல்ல.
மணிமேகலைக்கு இன்ஸெக்யூரிட்டி. என்னுடைய ஆதரவு பிரியங்காவிற்கு தான் என பதிவிட்டு இருக்கிறார். இதுவரை பிரபலங்கள் தங்களுடைய ஆதரவையும் மணிமேகலைக்கு தெரிவித்த போது கூட பிரியங்காவை குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் தற்போது பாவ்னியின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் இந்த பிரச்சினை மீண்டும் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
