VJ Rakshan: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் விஜே ரக்ஷன். முதலில் ராஜ்டிவி மற்றும் கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் பின் விஜய் டிவிக்கு மாறியதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருந்து வருகின்றனர். ஆங்கர் என்றால் அது பெண்கள்தான் சிறப்பாக செய்ய முடியும். அப்போதுதான் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள் என்ற முறையை ம.கா.பா.ஆனந்திற்கு பிறகு மாற்றிய பெருமை ரக்ஷனை சேரும். மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் ரக்ஷன்.
இதையும் படிங்க: ஸ்ரீவித்யா ஒன்னும் யாரும் இல்லாம சாகல!.. உண்மை தெரியாம பேசாதீங்க!.. பொங்கும் உறவினர்…
பல சேனல்களில் அவர் பணியாற்றினாலும் அவருக்கு என்ற ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்தது விஜய்டிவிதான். கலக்கப் போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் இவர் வெளியே தெரிய ஆரம்பித்தார். அதுவும் சக ஆங்கரான ஜாக்குலினுடன் ரக்ஷனை சேர்த்து வைத்து பல செய்திகள் வெளியானது.
இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரக்ஷன் ஏற்கெனவே திருமணமானவர் என்பது அதன் பிறகே தெரியவந்தது. அவருடைய மனைவியை எங்கும் பொது வெளியில் பார்த்திருக்க முடியாது. அவரும் கேமிராவை விரும்ப மாட்டாராம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..
அதனாலேயே ரக்ஷனுடன் எந்த விழாக்களுக்கும் அவர் மனைவி வந்ததே இல்லை. இந்த நிலையில் ரக்ஷனுக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்பதை சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தின் மூலம்தான் தெரியவந்தது. அவர் மகளுடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய ரக்ஷன் முதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதை பார்த்ததும் இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். ரக்ஷன் ஒரு ஆங்கராக மட்டுமில்லாமல் பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திலும் ரக்ஷன் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் அஞ்சா!… தாங்குவாரா உலக நாயகன்… ஜெட் வேகத்தில் வேலை செய்வதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
