எப்படி நின்னாலும் அள்ளுது கவர்ச்சி!.. சேலையில் சொக்க வைக்கும் விஜே ரம்யா..
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே ரம்யா. டிடி, பாவ்னா இவர்களுக்கு அடுத்தப் படியாக விஜய் தொலைக்காட்சியில் தன் பங்களிப்பை முழுவதுமாக கொடுத்தவர் இவர்.
இவர்கள் தான் அச்சாணி போல இருந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்கள். டிடியை போலவே ரம்யாவும் ஒரு சில படங்களில் தலையை காட்ட ஆரம்பித்தார்.
ஆடை படத்தில் அமலாபாலுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பின் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கான புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
மேலும் தன் உடம்பை பேணிக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா ரசிகர்களுக்காக தனது ஸ்டைலிஷான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்வித்து வருகிறார்.
இந்த நிலையில் சிகப்பு நிற சேலையில் சொக்க வைக்கும் அழகில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை உறைய வைத்து வருகிறார்.