பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு இவர் செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சமூக வலைதலங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் இவர்.
நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை விஜே வைஷு இடையேயான விவகாரம் கடந்த செப்டம்பர் 2025-ல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2011 முதல் நண்பர்களாக இருந்ததாகவும், 2018 முதல் இருவரும் காதலித்து வந்ததாகவும் வைஷு தெரிவித்தார். தாங்கள் பல ஆண்டுகள் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாஞ்சில் விஜயனுக்குத் திருமணம் நடந்தபோது, அவரே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததாகவும், ஆனால் திருமணத்திற்குப் பிறகும் நாஞ்சில் விஜயன் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் வைஷு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை தொட்ர்ந்து நாஞ்சில் விஜயன் மீது வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரை வைஷு திரும்ப பெற்றுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஓய்ந்து இருந்த நிலையில், சமீபத்தில் விஜய் திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சம்பவத்திற்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த வைஷு தனது இன்ஸ்டாவில், விஜய்க்கு சப்போர்ட் செய்யுற நீ என்னை பற்றி நினைத்தாயா? என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நாஞ்சில் விஜயனும் வைஷுவின் மாஸ்டர் பிளான் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த சீடியோவில் நான் வழக்கறிஞரின் பேச்சை கேட்டே என்ன காதலித்து ஏமாற்றினார் என்றும் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றினார் என்றும் புகார் அளித்தேன் என்று வைஷூ பேசிய ஆடியோ இருந்தது. இவர்களுக்கிடையே மீண்டும் சலசலப்பு
இந்த நிலையில் வைஷூ தற்போது ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாஞ்சில் விஜயன் திருவிளையாடல் பார்ட் 1 என்று நேற்றும் பார்ட் 2 என்று இன்றும் வெளியிட்டுள்ளார். அந்த் வீடியோவில் நாஞ்சில் விஜயனும் வைஷீவும் குளத்தில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.





