Categories: Cinema News latest news

விஜய்க்கு அந்த விஷயம் ரெம்ப பிடிக்கும்.. ஆனால், செய்யமாட்டார்… பிரபல இயக்குனர் கூறிய சீக்ரெட் தகவல்…

தமிழகத்தில் தற்போதைய உச்ச நட்சத்திரம் என்றால் அது விஜய் தான் என்று கூறும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் வசூலில் பெரிய சாதனையை படைத்து வருகின்றன. கடைசியாக வெளியாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத பீஸ்ட் திரைப்படம் கூட நல்ல வசூலை கொடுத்தது.

 

அவரை வைத்து, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர் ஹிட் இயக்குனரும், ஃபகத் பாசில் தந்தையுமான இயக்குனர் பாசில் சமீபத்தில் விஜய் பற்றி கூறியுள்ளார்.

அதாவது, விஜய்க்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம், முக்கியமாக ஹீரோயிசம் இல்லாத படங்கள் நடிக்க ஆர்வம் அதிகமாம். ஆனால், அதனை விஜய் செய்ய மாட்டாராம்.

இதையும் படியுங்களேன் – ஜாலியாக சுற்றித்திரியும் தம்பி கார்த்தி… அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அண்ணன் சூர்யா…

காரணம், அப்படி நடித்தால் தனது ரசிகர்களுக்கு பிடிக்காது. எனது படத்தில் பாட்டு, டான்ஸ், சண்டை காட்சிகள் இருக்க வேண்டும் அதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என கூறிவிடுவாராம். ஆனால், இப்பொது விஜய் ரசிகர்கள் இல்லை முழுக்க மாறிவிட்டார்கள். கதைக்களம்,  நல்லதாகவும், விறுவிறுப்பாக இருந்தால் மட்டும் போதும் என மாறிவிட்டார்கள் என்றே கூறலாம்.

Published by
Manikandan