பிரம்மாண்டமாக இன்ட்ரோ கொடுத்துவிட்டு பவானியை டம்மி செய்த விஜய் டிவி!

by பிரஜன் |
pavani reddy
X

pavani reddy

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பவானி ரெட்டி. ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் தொடங்கிய பவானி 2017 ஆம் ஆண்டில், சின்ன தம்பி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

அதையடுத்து அவ்வளவாக தலைகாட்டவில்லை. இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கணவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். இது குறித்து பிக்பாஸில் என்னுடைய கணவர் இறந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் வெளிவரவே இல்லை.எனக்கு அழுகையே வரவில்லை. குடும்பம், குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ வேண்டிய சமயத்தில் என் கணவர் இறந்துவிட்டது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கூறினார்.

pavani reddy

pavani reddy

இது ப்ரோமோவில் இடம்பெற எல்லோரும் முழு எபிசோடையும் காத்திருந்து பார்த்தனர். ஆனால், அதை விஐய் டிவி ஒளிபரப்பவே இல்லை. மேலும், இப்போதெல்லாம் பவானியை விஜய் டிவி காட்சிகளில் காண்பிப்பதில்லை. பவானிக்கு நிறைய ரசிகர்கள் வட்டாரம் இருந்தும் அவரை ஏன் வளர்த்து விடுவதில் யோசிக்கிறார்கள் என நெட்டிசன்ஸ் விமர்சிக்கின்றனர்.

Next Story