
Cinema News
அன்புள்ள அப்பா! அப்பா! தந்தையர் தினத்தில் கேப்டனை சந்தோஷப்படுத்திய மகன்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். அனைவரும் விரும்பத்தக்க நடிகராகவும் திகழ்ந்து வந்தார். அந்த அளவுக்கு அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் மிகுந்த அக்கறையுடனுமே பழகி வந்தார். அதனாலயே நடிகர் சங்கத் தலைவராகவும் அவரால் வர முடிந்தது.

viji
150 படங்களுக்கு மேல் நடித்து ஒரு கேப்டனாக மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் விஜயகாந்த். ஏகப்பட்ட அவமானங்கள் தோல்விகள் என பார்த்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் வெற்றிகளின் உச்சத்தால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தார்.
அவரின் தெரியவில்லை புலன்விசாரணை ,கேப்டன் பிரபாகரன், போன்ற பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. சினிமாவில் நடிக்கும் போதே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் விளங்கினார். அதனால்தான் அரசியலில் அவரால் வெகு சீக்கிரமாக நுழைய முடிந்தது.

viji3
தனியாக கட்சி ஆரம்பித்து ஆறு வருடங்களில் எதிர்க்கட்சித் தலைவராக நிலைத்து நின்றார் விஜயகாந்த். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகாந்த்.
பொது இடங்களுக்கு அவர் எங்கும் செல்வதில்லை. மேலும் திரை உலகில் இருந்து யாராவது விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்றால் அவர் வீட்டில் சென்று தான் பார்த்து விட்டு வருகின்றனர். மேலும் ஏதாவது விழா பண்டிகை காலங்களில் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் அவ்வப்போது வெளிவரும்.

vijij2
அதேபோல் தான் நேற்று உலக தந்தையர் தினம் என்பதால் விஜயகாந்த் மகன்கள் இருவரும் சேர்ந்து விஜயகாந்திற்கு ஒரு அன்பளிப்பு பரிசினை கொடுத்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : தனது டூப்பு நடிகருக்கும் அள்ளி கொடுத்த எம்.ஜி.ஆர்!.. அட இவ்வளவு செஞ்சிருக்காரா!..