லண்டனில் சங்கீதா!..தனியாக வசிக்கும் விஜய்.. இணையத்தில் பரவும் செய்திகள் உண்மையா?...
நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என இரண்டு மகளும் உள்ளனர். தற்போது மகன் ஜோசனுக்கு இப்போது 22 வயதும், திவ்யாவுக்கு 17 வயதும் ஆகிறது.
திரையுலகில் தற்போது ஒரு வதந்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜயும், அவரின் மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. ஏற்கனவே, அம்மா, அப்பாவை பிரிந்து தனியாக நீலாங்கரையில் வசித்து வருகிறார் விஜய். பொதுவாக விஜயின் படம் தொடர்பான விழாக்களில் சங்கீதா கலந்து கொள்வார். அதேபோல், திரையுலகை சேர்ந்த பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எனில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துகொள்வார்.
ஆனால், சமீபகாலமாக விஜயின் நிகழ்ச்சிகளில் சங்கீதாவை பார்க்க முடியவில்லை. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை. அதேபோல், இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா வளைகாப்பு நிகழ்ச்சியிலும் விஜய் தனியாகவே கலந்து சென்றார். கடைசியாக 2020ம் வருடம் மாஸ்டர் படத்தின் ஆடியோ விழாவில் சங்கீதா கலந்து கொண்டார். அதன்பின் அவரை விஜயுடன் பார்க்க முடியவில்லை.
எனவே, இதைவைத்து இருவரும் பிரிந்திருப்பதாக செய்திகளை சிலர் பரப்ப துவங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால், இந்த செய்தி பொய் எனக்கூறப்படுகிறது. அதாவது, விஜய் அடிக்கடி தனது மாமனார் வீடு இருக்கும் லண்டன் செல்வது வழக்கம். அதோடு, அங்கு மாமனார் மூலமாக நிறைய தொழிகளிலும் பண முதலீடும் செய்துள்ளாராம். எனவே, அவற்றை பார்த்துக்கொள்வதற்காகவே சங்கீதா அடிக்கடி லண்டன் செல்வாராம். இதை வைத்துதான் இப்படி கதைகட்டி விட்டுள்ளனர் என விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். பிரபலங்கள் பற்றி தேவையில்லாமல் இப்படியெல்லம் வதந்திகளை பரப்புவதே இவர்களின் வேலை எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பிரபலங்கள் ஆகிவிட்டாலே இப்படி வதந்திகளில் சிக்குவது இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:என்.எஸ்.கே சம்பளமாக கொடுத்த ஒரு ரூபாயை பத்தாயிரம் ரூபாயாக மாற்றிக்காட்டிய கலைஞர்… மாயமில்லை! மந்திரமில்லை!