VJ Priyanka: விஜே பிரியங்கா முதல் கணவரை பிரிந்தது இதற்காக தான்… இப்போவாச்சும் திருந்துவாரா?

VJPriyanka
VJ Priyanka: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி விஜே பிரியங்கா திடீர் திருமணம் வைரலாகி வரும் நிலையில் அவர் முதல் திருமணம் முறிவிற்கான காரணமும் வெளியாகி இருக்கிறது.
தற்போது விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் விஜே பிரியங்கா. சுட்டி டிவி மற்றும் சன் டிவியில் நிகழ்ச்சி செய்து வந்தவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு வர அதை பிடித்துக் கொண்டு தற்போது மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விட்டார்.
கலகலப்பான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தாலும் இவர் மீது ரசிகர்களுக்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட சக தொகுப்பாளினியான மணிமேகலை இடையான சண்டை சமூக வலைத்தளங்களில் பரவியது.
இரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை சொல்லிக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட விஜே பிரியங்காவிடமிருந்து எந்தவிதமான கருத்துகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் டிவியில் பணியாற்றியபோது அங்கே புரோக்ராம் மேனேஜராக இருந்த பிரவீன் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
விருது மேடை ஒன்றில் கூட தன்னுடைய மாமனார் தனக்கு கால் அமுக்கி விடுவதாக கூட பேசி ஆச்சரியத்தை கிளப்பினார். கொரோனா காலத்தில் இவர் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில் முதல் சில வீடியோக்களில் மட்டுமே கணவர் பிரவீன் இடம் பெற்று இருப்பார்.
ஆனால் அதைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோக்களில் காணப்படாமல் இருந்தார். விஜே பிரியங்காவும் தன்னுடைய அம்மா வீட்டிலிருந்தே தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் அதில் எந்த இடத்திலுமே தன்னுடைய கணவர் குறித்து அவர் பேசாமல் இருந்தது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குடும்ப சுற்றில் கூட அம்மா மற்றும் தம்பி இருவரும் மட்டுமே வந்தது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் அவர் விஜய் டிவியில் வேலை செய்வதால் கூட வராமல் இருப்பதாக பேசிக்கொண்டனர்.
அவர் வெளியேறிய பின்னர் கூட கணவரை காட்டாமலும் தன்னுடைய நண்பர்களுடன் மட்டுமே அவர் நேரம் செலவழித்து வந்தது இவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. பின்னர் எழுந்த தகவலின்படி, விஜே பிரியங்கா அம்மா வீட்டிலே இருப்பது அவர்களுக்குள் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பிரச்னையில் தொடங்கி இருவரும் சண்டையிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் முதல் கணவர் ஏற்கனவே இரண்டாம் திருமணம் செய்து தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தற்போது விஜே பிரியங்காவின் இரண்டாம் திருமணம் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.