எம்.ஆர்.ராதாவை சுற்றி வளைத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள்!.. தன் மீது படித்திருந்த கரையை போக்கிய நடிகவேள்..

mr radha
தமிழ் சினிமாவில் தன்னுடைய கனத்த குரலாலும் கம்பீரமான தோற்றத்தாலும் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் கிடைத்த வரவேற்பினால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகவேள். இவரை நினைக்கும் போது இவர் நடித்த இரத்தக் கண்ணீர் திரைப்படம் தான் நம் கண்முன் தோன்றும்.
அந்த அளவுக்கு இரத்தக்கண்னீர் படத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஒரு தொழு நோயாளியாகவே தன்னை மாற்றிக் கொண்டார். படப்பிடிப்பில் கூட இவரை பார்க்கும் போது எல்லாரும் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்களாம். அந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் எம்.ஆர்.ராதா.

mrradha
எம்.ஆர்.ராதாவின் கெரியரிலேயே இரத்தக்கண்ணீர் படம் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாகவே மாறியது. இன்றும் பல பேர் அந்த படத்தை மிமிக்ரி செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. முதலில் நாடகமாக தான் அரங்கேற்றினார் எம்.ஆர்.ராதா. அதில் கிடைத்த வரவேற்பை பார்த்து படமாக்கினார்கள்.
இதையும் படிங்க : சூப்பர் ஸ்டாராவே இருந்தாலும் படம் நல்லா இருந்தாத்தானே ஓடும்… அட்டர் ஃப்ளாப் ஆன படத்தால் நயன்தாராவுக்கு வந்த சோதனை…
அந்தப் படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு படவாய்ப்புகளையும் இழக்கத் தொடங்கினார் எம்.ஆர்.ராதா. ஏனெனில் இவரின் மேல் இருக்கும் குறை என்னவெனில் படப்பிடிப்பிற்கு சரியாக வரமாட்டாராம். மூன்று நாள்கள் வந்தார் என்றால் மறு நாள் நாடகம் நடத்த வேண்டும் என்று நாடகத்தில் நடிக்க போய்விடுவாராம்.
அதனாலேயே பணத்தை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் எம்.ஆர். ராதாவை படத்தில் பயன்படுத்த தயங்கினார்களாம். அதன் காரணமாகவே படவாய்ப்புகளை இழந்தாராம் நடிகவேள். ஒரு சமயம் வி.கே.ராமசாமியும் ஏபி. நாகராஜனும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

vk ramasamy
அதை அறிந்த எம்.ஆர்.ராதா நேராக வி.கே.ராமசாமியிடம் வந்து எனக்கு வாய்ப்பு வழங்கும் படி கேட்டிருக்கிறார். ஆனால் வி.கே.ராமசாமியும் ஏ.பி, நாகராஜனும் கொஞ்ச நேரம் யோசிக்க நாகராஜன் இந்த யோசனையை வி,கே.ராமசாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டாராம். அதன் பிறகு நீண்ட யோசனைக்கு பிறகு ராமசாமி சரி என்று சொல்ல அவர்கள் எடுக்கும் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
ஆனால் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த படத்தின் படப்பிடிப்பிறகு காலையிலேயே வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் எம்.ஆர்.ராதா. மேலும் வந்தவர் இரவும் தாமதமாக தான் போவாராம். அந்த அளவுக்கு தன் மீது படிந்திருந்த கரையை இந்த படத்தின் மூலம் போக்கியிருக்கிறார். இதை பார்க்கவே பல தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பிற்கு வந்து எம்.ஆர்.ராதாவா இது? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு அசத்தியிருக்கிறார் நடிகவேள்.

mrradha
அதிலிருந்து ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது எம்.ஆர், ராதாவுக்கு. அந்தக் காலத்திற்கு பிறகு வெளியான அனைத்துப் படங்களும் எம்.ஆர்.ராதாவின் கால்ஷீட் இல்லாமல் வெளியானது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார். இந்த செய்தியை சித்ரா லட்சுமணன் கூறினார்.