சிங்கக் கூண்டில் மாட்டுன கதையாக வி.கே.ராமசாமியின் நிலைமை!.. நடிகவேளிடம் சிக்கி முழித்த சம்பவம்..
இரத்தக்கண்ணீர் திரைப்படம் தமிழ் சினிமாவில் எப்படி ஒரு தாகக்த்தை ஏற்படுத்தியது என்று பலபேருக்கு தெரிந்த விஷயம். இன்றளவும் அந்தப் படம் பேசுபொருளாக இருக்கிறது என்றால் எம்.ஆர்.ராதா அந்த படத்தில் கொடுத்த பங்களிப்பு தான் என்று சொல்ல வேண்டும். யாரும் அந்த அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.
நாடக மேடையில் அரங்கேற்றிய இரத்தக்கண்ணீர் கதையை வெள்ளித்திரையில் கொண்டு வந்து ஒரு ஆச்சரியத்தையே உருவாக்கினார் நடிகவேள். ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் படப்பிடிப்பிற்கு சரிவர வராத எம்.ஆர்.ராதாவின் மேல் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தி இருந்து வந்துள்ளது.
அதன் காரணமாகவே எம்.ஆர்.ராதாவிற்கு வாய்ப்பு கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர். அந்த சமயத்தில் தான் வி.கே.ராமசாமியு. ஏ.பி. நாகராஜனும் சேர்ந்து ஒரு கதையை வடிவமைத்து படமாக்க திட்டமிட்டிருந்தார்கள். ‘ நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற தலைப்பில் அந்தக் கதையை எழுதியது வி.கே.ராமசாமி தான். மேலும் அவர் எழுதும் போது அவரின் அண்ணனான டி.கே.வை முன்னிலை படுத்தி தான் எழுதியிருந்தார் ராமசாமி.
அதனாலேயே அவரின் அண்ணனையே இந்த படத்தின் லீடு ரோலில் நடிக்க முடிவெடுத்து டி.கே.வுக்கு முன்பணத்தொகையை கொடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் எம்.ஆர்.ராதா இவர்களை பார்த்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டாராம். எம்.ஆர்.ராதாவே தானாகவே வந்து கேட்கிறாரே என்று சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஏனெனில் யாரிடமும் வாய்ப்பிற்காக போய் நின்னதில்லையாம் ராதா.
ஆனாலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக படப்பிடிப்பிற்கும் வரமாட்டார், வந்தாலும் நாடகத்திலும் நடிக்க போயிருவார் என்று கருதி யோசித்துக் கொண்டிருந்த ஏ.பி, நாகராஜன் ராமசாமியிடம் இவரிடம் கையெழுத்து வாங்கி வாய்ப்பை கொடு என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்.
இப்போது ராமசாமி இதையெல்லாம் சொல்லி எப்படி ராதாவிடம் எப்படி கேட்பது என்று பயந்து கொண்டே நிற்க ராதாவே வாய் திறந்து நான் சரியாக படப்பிடிப்பிற்கு வருவேன், இந்தப் படம் முடிகிற வரையில் வேறெந்த நாடகங்களிலும் நடிக்க போக மாட்டேன், என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்று சொல்ல ராமசாமிக்கு வியப்பாக இருந்ததாம். உடனே ராமசாமி தன் அண்ணனிடம் நிலையை எடுத்துக் கூறி அவருக்கு வழங்கிய வாய்ப்பை ராதாவுக்கு கொடுத்து நடிக்க வைத்தனர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலிருந்து எம்.ஆர். ராதா இல்லாத படங்களை பார்ப்பது என்பது அரிதாகவே இருந்தது. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.