Connect with us
vkr

Cinema News

கலகலப்பாகவும் குணச்சித்திரத்திலும் கலக்கிய வி.கே ராமசாமி

1926 அன்று ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் பிறந்தவர் வி.கே ராமசாமி. வி.கே ராமசாமி என்பதன் முழுப்பெயர் விருதுநகர் கந்தன் ராமசாமி என்பதாகும். இவரது பூர்விக ஊர் விருதுநகர் ஆகும்.

vkr-2

வி.கே ராமசாமி தமிழ் சினிமாவில் பதித்த முத்திரைகள் கொஞ்சமல்ல
எண்ணற்ற படங்களில் காமெடி காட்சிகளிலும், வில்லத்தனத்திலும்,, குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கி இருப்பார்.

பெரும்பாலும் எல்லா தலைமுறை நடிகர்களுடனும் நடித்தவர் இவர். இவர் டயலாக் பேசும் விதமே அலாதியாக இருக்கும் அதுல பாருங்க என இவர் ஆரம்பிக்கும் விதமே செம ஜோராக இருக்கும்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என 40களில் ஆரம்பித்த தன் கலைப்பயணத்தை தான் இறக்கும் வரை பிஸியாகவே தொடர்ந்தவர் இவர்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பே வெளியான நாம் இருவர் படத்தில் நாம் இருவர் படம்தான் இவருக்கு முதல் படம். அந்த படத்தில் வித்தியாசமாக ஒல்லியான உடல்வாகுடன் காட்சியளிப்பார். அதில் மட்டும்தான் இவரை ஒல்லியான உடல்வாகுடன் பார்க்க முடியும்.

அதன் பிறகு இவரது உருவத்தோற்றம் மாறி விட்டது. சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படத்தில் சிவாஜியின் தங்கை கல்யாணியாக வரும் ஸ்ரீ ரஞ்சனி ஒவ்வொரு இடமாக சென்று சிக்கலில் மாட்டிக்கொள்வார். ஒரு கட்டத்தில் வி.கே ராமசாமி வீட்டுக்கு வேலைக்காரியாக வர வி.கே ஆரின் மனைவியும் அவரிடம் அன்புகாட்டுவார். ஆனால் வி.கே.ஆரோ சபல புத்தியோடு கல்யாணியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்யும் கொடூர வில்லனாக வருவார்.

இப்படி பல படங்களில் வி.கே.ஆர் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே நேரத்தில் நகைச்சுவைக்கும் வி.கே ஆர் குறைவைத்ததில்லை. நாகேசும் இவரும் ஜோடி சேர்ந்து செய்யும் காமெடி பல படங்களில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர்.
ருத்ர தாண்டவம் என்ற படத்தில் வி.கே.ஆர் சிவனாகவும் நாகேஷ் பூசாரியாகவும் நடித்திருப்பார். கடவுளின் பெயரால் நடக்கும் அநியாயங்களை அந்த சிவனே நேரில் வந்து தற்கால நடைமுறைக்கேற்ப விவரிப்பதாக கதை அமையும்.

வி.கே.ஆர் உடன், கவுண்டமணி, ஜனகராஜ் போன்றோர் இணைந்து செய்த காமெடிகள் புகழ்பெற்றது. அக்னி நட்சத்திரம் படத்தில் யாருக்கும் தெரியாமல் ஜனகராஜும், வி.கே.ஆரும் ப்ளூ பிலிம் பார்ப்பது, வசந்தகால பறவை, சக்கரவர்த்தி, சிங்காரவேலன் என இன்னும் சில படங்களிலும் கவுண்டமணியுடன் சேர்ந்து கலக்கல் காமெடி செய்துள்ளார் வி.கே.ஆர்.

agni-natchathiram

நடிகர் கமல்ஹாசன் தனது 60 வருட சினிமா வாழ்க்கையில் தன் வாழ்வில் பிடித்த 60 முக்கிய நபர்களில் வி.கே ராமசாமிக்கு முக்கிய இடம் கொடுத்தார்.
அதே போல் ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்துள்ளார் வி.கே.ஆர் அவரது இறுதிக்காலத்தில் ஒரு படம் தயாரித்து பொருளாதார ரீதியாக வி.கே.ஆர் கஷ்டப்படுவதை உணர்ந்த ரஜினிகாந்த் அவரின் அருணாச்சலம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அவரை நடிக்க வைத்து அவருக்கு படத்தின் லாபத்தில் ஒரு ஷேர் வழங்கியது வரலாறு.

vkr1

பாஸில் இயக்கத்தில் வந்த அரங்கேற்ற வேளை, வருஷம் 16 இரண்டு படங்களும் வி.கே.ஆரின் பெயர் சொல்லும். இதில் வருஷம் 16 படத்தில் சுட்டிப்பையன்களில் ஒருவராக வரும் மாஸ்டர் டிங்குவை பார்த்து ஏலேய் மூஞ்சிய பாரு நல்லா ஆனந்த விகடன் அட்டைப்படம் மாதிரி புள்ளைங்களா இதுங்களாம் என நறுக்கு தெறித்தாற்போல் பேசும் வசனங்கள் எல்லாம் 80ஸ்கிட்ஸால் மறக்க முடியாதவை.

maxresdefault-3

அதே போல் அரங்கேற்ற வேளை படத்தில் சக்தி நாடக சபா வைத்துக்கொண்டு வேறு ஒரு ஒருவருக்கு செல்ல வேண்டிய தொலைபேசி இவருக்கு ராங் நம்பராக வரும், ராங் கால் நபர்களிடமும் அந்த வீட்டில் தங்கி இருக்கும் பிரபு, ரேவதியிடமும் வி.கே.ஆர் அடிக்கும் கூத்துக்கள் கலகலப்பானவை என்றும் மறக்க முடியாதவை.
கோபுர வாசலிலே படத்தில் பெண்களை சைட் அடிக்கும் வயோதிக ரோமியோவாகவும், அதிசயப்பிறவி படத்தில் எமலோகத்தில் பாவக்கணக்கை எழுதும் சித்திரகுப்தனாகவும் கலக்கி இருப்பார். அதிசயப்பிறவி படத்தில் எமலோகத்தில் கலாட்டா செய்யும் ரஜினியை கண்டித்து எமதர்மராஜனிடம் பிரபு என்ன இவன் நம்மையே சபிக்கிறான் என வி.கே ஆர் தனது மொழியில் பேசி இருப்பது வேற லெவலாக இருக்கும்.

arangetravelai
முக்கியமாக பாண்டியராஜன்இயக்கி நடித்த ஆண்பாவத்தில் தியேட்டர் முதலாளியாக ஓப்பனிங்கிலேயே வருவார். நான் ஒரு கோவில் கட்னேன் யாரும் சாமி கும்பிட வரல, நான் ஒரு பள்ளிக்கூடம் கட்னேன் யாரும் படிக்கவே வரல. ஆனா இப்போ தியேட்டர் கட்டி இருக்கேன் ஊரே ஒண்ணு கூடி வந்து இருக்கிங்க என்று தனது பாணியில் கலகலப்பாக சொல்லுவார். இது போல காட்சிகளை எல்லாம் இன்றும் பார்த்து ரசிக்கலாம்.

கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன் போன்ற கல்யாணராமன் சீரிஸ் படங்களில் சாமிப்புள்ள என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மோகன் நடிப்பில் வந்த ரெட்டை வால் குருவி, மெளனராகம் உள்ளிட்ட படங்களிலும் கலக்கி இருப்பார்.
வி.கே ஆர் காலங்கள் கடந்தும் நம்மால் மறக்க முடியாதவர்.

maxresdefault-4
வேலைக்காரன் திரைப்படத்தில் அடேய் ராஸ்கோலு ராஸ்கோலு என ரஜினிகாந்தை கூப்பிடுவாதாகட்டும் கலைஞானி கமலஹாசனுடன் இவர் நடித்த மகராசன் திரைப்படம் பலருக்கும் மிகவும் பிடித்தது ரகசியம் சொல்ல வரும் மனைவி திரும்ப கோமா நிலைக்கு சென்று விட அவஸ்தையில் விழி பிதுங்கும் கேரக்டரில் கூடவே நம்ம கமல்,கவுண்டர்,செந்தில் நகைச்சுவைக்கு கேட்கவா வேணும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனை காட்டிக்கொடுக்கும் எட்டப்பனாக நடித்து எட்டப்பன் கேரக்டருக்கு உயிர் கொடுத்தார். கடைசி காலக்கட்டங்களில் இவர் நடித்த டும் டும் டும் படத்தில் கூட காது கேட்காதவராக கலக்கியிருப்பார் பல படங்களில் வில்லனாக நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக நடித்த வி.கே.ஆர் அவர்கள் 2002ம் ஆண்டு மறைந்தார் திரையுலகம் இருக்கும் வரை மறந்துவிட முடியாத நடிகர் இவர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top