அப்போ அந்த லிப் லாக் முத்தம் உண்மைதானா.?! திரை மறைவு ரகசியம் இதுதானாம்.!
திரையுலகில் நமக்கு தெரிந்த காதல் கதைகளை விட தெரியாத காதல் கதைகள் இங்கு ஏராளம். அதனை பலரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து பலவிதமாக கூறுவதுண்டு. அப்படி ஒரு காதல் கதை தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
பொதுவாக காதல் திரைப்படங்களில் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டுமானால், இந்த படத்திற்கு முன்னர் அவர்கள் சந்தித்து கொண்டு பேசியதில்லை என்றால், அதில் நடிக்க நடிகர் நடிகையர் தயங்குவர். அதனால் பல டேக்குகள் கூட வரும். ஒரு முத்தக்காட்சி வாங்குவதற்கு படக்குழு கஷ்டப்படும்.
ஆனால், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஓமன பெண்ணே எனும் பாடலில் சிம்புவும் த்ரிஷாவும் நிறைய தடவை லிப் லாக் முத்தம் கொடுத்து கொள்வார்கள். அது அத்தனையும் றியலாக இருந்தது போல இருக்கும். அப்படியே நடனமாடி கொண்டு இருப்பர் எதேர்சையாக உண்மையான காதலர்கள் போல முத்தம் கொடுத்து கொள்வார்கள்.
இதையும் படியுங்களேன் - சிம்புவின் மார்க்கெட்டை காலி செய்ய களமிறங்கும் நடிகை.! ஒரு வேளை பழைய பகையோ.?!
இது குறித்து அண்மையில், சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், அந்த காட்சி உண்மையில் இருவரும் காதலுடன் முத்தம் கொடுத்து கொண்டனர். இருவர்க்கும் அலை எனும் படத்தில் நடிக்கும் போதே காதல் என கிசுகிசுக்கப்பட்டது. அப்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்ததும், மீண்டும் அந்த காதலை புதுப்பித்துக்கொண்டு நடித்தனர். அதனால், அதான் அந்த படம் அப்படியே நிஜ காதலர்கள் தோன்றியது போல இருக்கும். மேலும் உதட்டு முத்தக்காட்சி எல்லாம் உண்மையாக கொடுக்கப்பட்டது' என குறிப்பிட்டார்.