40 அடி ஆழமான ஏரி!.. நீச்சல் தெரியாமல் இறங்கிய வைஜெயந்தி மாலா!.. நடந்த சம்பவம் என்ன தெரியுமா?..
அந்த காலத்தில் மங்கைகளுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக வலம் வந்தவர் ஸ்ரீதர். கல்லூரி மாணவிகள் பலரும் ஸ்ரீதர் மீது அலாதி பிரியம் வைத்திருந்தனராம். அதற்கு காரணம் அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் காதலை பற்றி பேசுபவையாக அமைந்தன.
வீனஸ் பிக்சர்ஸ்க்கு படங்கள் கொடுத்து வந்த ஸ்ரீதர் வீன்ஸிடம் பிரிந்து வந்து தனியாக ஒரு பட நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலில் ‘தேனிலவு’ என்ற படத்தை தயாரித்தார்.
அந்த படத்தில் நடிகர் ஜெமினிகணேசன், நடிகை வைஜெயந்திமாலா, நம்பியார், தங்கவேலு என பெரிய பட்டாளமே
இருந்தன. படத்தை காஷ்மீரில் தயாரிக்க நினைத்து நட்சத்திரங்களை குடும்பங்களோடு அழைத்து சென்றார் ஸ்ரீதர்.ஒரு பாடல் காட்சியை அங்கு இருந்த ஒரு ஏரியில் படமாக்க எண்ணினார்.
அந்த ஏரி 40 அடி ஆழம். ஆனால் வைஜெயந்திமாலாவுக்கு நீச்சல் தெரியாது என்பது அப்பொழுது தான் ஸ்ரீதருக்கு தெரியவந்தது. எப்படியாவது இரண்டு நாள்களில் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள் என ஸ்ரீதர் வைஜெயந்தியிடம் சொல்ல அங்கு நம்பியார் தன் மகளுடன் வந்திருந்ததால் அவர் மகளுக்கு நீச்சல் தெரிந்ததால் அவர் துணையுடன் வைஜெயந்திமாலா நீச்சல் கற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு தயாரானார். ஆனாலும் இரண்டு நாள்களில் நீச்சல் கற்றுக் கொண்டு 40 அடி ஆழ ஏரியில் துணிச்சலாக நடித்த வைஜெயந்தி மாலாவை அனைவரும் பாராட்டினர்.