மோகன், பூர்ணிமா காதலுக்கு பாக்கியராஜ் இடைஞ்சலாக இருந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

MBGPJ
தமிழ்த்திரை உலகில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். இவர் எந்தளவுக்கு புகழின் உச்சியில் இருந்தாரோ அந்தளவு திரைஉலகில் இருந்தும் காணாமல் போய்விட்டார். அதே நேரம் தற்போது மீண்டும் நானும் இருக்கிறேன் என்பது போல 'ஹரா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து தளபதியுடன் கோட் படத்திலும் நடித்து வருகிறார். இவரது காதல் எப்படிப்பட்டது? பூர்ணிமாவுடன் இருந்த அந்தக் காதலுக்கு பாக்கியராஜ் இடையூறாக இருந்தாரா என மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
பெங்களூருவுல ஒரு பேங்க்ல வேலை பார்த்தவர் தான் மைக் மோகன். அவரது இயற்பெயர் மோகன் ராவ். அப்போது பாலுமகேந்திராவின் கோகிலா படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணினார். அப்புறம் மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் தான் அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். இந்தப் படங்களில் அவருக்கு ஜோடி பூர்ணிமா ஜெயராம். ராசியான ஜோடி என்று இவர்களைப் பற்றி திரையுலகில் அனைவரும் பேசினார்கள்.
அப்போது இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அவர்களுக்குள் காதலும் இருந்ததாம். ஒரு முறை பாக்கியராஜ் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். பெரும்பாலும் மோகன் பாம்குரோவ் ஹோட்டலில் தான் அவர் தங்கியிருப்பார்.

Kilinjalgal
அங்கு தான் படங்களோட டிஸ்கஷன் நடக்கும். அப்போ மோகனும், பூர்ணிமாவும் தோள் மேல கையைப் போட்டுக்கிட்டு ஓட்டல் வாசல்ல பேசிக்கிட்டு இருந்தாங்களாம். அதைப் பார்த்த பாக்கியராஜ் 'என்ன கலி காலம்யா... ஹீரோயின் எல்லாம் இப்படி பேசுனா என்னாகறது?' ன்னு பேசினாராம். மோகன் அப்போது யார் கூட நடிச்சாலும் படம் வெள்ளிவிழா தான். அதனால பூர்ணிமா அவரை விரும்பினார்.
ஆனால் மோகன் அந்தளவு விருப்பம் இல்லாமல் இருந்தார். அவர் சாதாரணமா ஒரு நடிகையிடம் பேசுவதைப் போலத் தான் பேசினார். அந்த ஒரு கோபம் பூர்ணிமாவுக்கு இருந்தாம். அதனால் அவருக்கு பெரிசா நோய் இருப்பதாக சொன்னதாகவும் அப்போது கிசுகிசுவாகப் பேசப்பட்டது. அதனால் தான் அவர் பழிவாங்கினார் என்றும் சொன்னார்கள். அந்த நேரத்தில் அவருக்கு வெள்ளி விழாவிற்கான படங்கள் குறைந்து போய் சின்ன சின்ன படங்களாக வர ஆரம்பித்தது.
கடைசியாக உருவம் என்ற படத்தில் கொடூரமான பேயாக நடித்து இருப்பார். தொடர்ந்து அவரது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அவர் சொந்தமாக 2 படங்கள் எடுத்தார். அதுவும் சரியாகப் போகலை.
இதையும் படிங்க... ஒரு வழியா முடிஞ்சுப்பா கல்யாணம்! இருந்தாலும் பிரேம்ஜி காலில் இத நோட் பண்ணீங்களா?
பாக்கியராஜ் தெலுங்கு நடிகை பிரவீனாவை முதலில் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததார். அதாவது கோமா நிலையில் இருந்துள்ளார். அவர் இறந்தும் போனார். 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு ஜோடியாக நடித்த பூர்ணிமாவைக் காதலித்து 2வதாக திருமணம் செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.