வெங்கட்பிரபு – விஜய் காம்போ முதன் முதலாக இணைந்துள்ளது. படத்தின் தாறு மாறு வெற்றி தமிழகத்தில் இருந்த போதும் பிற மாநிலங்களில் இது நடந்ததா என்று பலரும் சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள். அதன் உண்மைத்தன்மை என்னன்னு இப்போ பார்க்கலாம்.
Also read: சிம்ரனுக்கு திடீரென வந்த விபரீத ஆசை!.. அட்வைஸ் சொல்லி அனுப்பி விஜய்!…
விஜய் தந்தை மகன் என இரு கேரக்டர்களில் நடித்துள்ளார். ஆனால் படத்தில் 3 வேடம். இன்னொரு முக்கியமான விஷயம் டெக்னாலஜி. இது இந்தப் படத்தில் ஏஐ மற்றும் டீஏஜிங் என ரசிகர்களுக்கு இரு புதிய விருந்தைத் தந்துள்ளது. ஆனால் அது திருப்தியில்லை என்பது தான் உண்மை.
டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளவயது விஜயைக் காட்டுறாங்க. அதே போல ஏஐ டெக்னாலஜியில் விஜயகாந்தையும் கொண்டு வந்துள்ளார்கள். பவதாரணி குரலையும் கொண்டு வந்துள்ளார்கள். எல்லாமே கேட்கும் போது மாஸ் தான். என்றாலும் திருப்தியைத் தரவில்லை என்பதே நிஜம்.
ஆனால் விஜய் தன் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு கமர்ஷியல் பேக்கைக் கொடுக்க வேண்டுமோ அதைத் தவறாமல் செய்துள்ளார்.
கோட் படம் தமிழகம் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகம் இந்த மாதிரி இடங்கள்ல எல்லாம் நிறைய கோடிகள் ரூபாய் நஷ்;டப்பட்டு இருக்கு. இதுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் அந்தந்நத விநியோகஸ்தருக்கு ரீ பண்ட் பண்ணுவாங்களா? அல்லது இதைக் கண்டுக்காம அப்படியே விட்டுருவாங்களா?
கோட் படம் மிச்ச மாநிலங்கள்ல நஷ்டத்தைத் தான் கொடுத்துருக்குன்னு தோணுது. இதைப் பத்தி உங்க கருத்து என்னன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
நீங்க சொல்லி இருக்குற வசூல் விவரங்கள்லாம் சரியான விவரங்கள் இல்லன்னு தான் நான் நினைக்கிறேன். அந்தப் படத்தோட கர்நாடக விநியோகஸ்தருக்கு நல்ல லாபமே கிடைக்கும்னு சொல்றாங்க.
அதே மாதிரி தான் கேரள விநியோகஸ்தருக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்னு சொல்றாங்க. ஆந்திரால மட்டும் தான் கோட் படம் சரியாக ஓடலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கோட் படம் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு 13 கோடி வரை நஷ்டத்தைக் கொடுத்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…