கஷ்டப்பட்டு நடித்த கமலின் பட வசூலை அசால்டாக முறியடித்த ராமராஜனின் படம்...

by sankaran v |
Kamal, Ramarajan
X

Kamal, Ramarajan

1989ல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் குள்ளமாக நடித்து வித்தியாசம் காட்டியிருந்தார். இது யாரும் செய்யாத புதுமுயற்சி என்றதால் திரையுலகில் இன்று வரை பேசும் பொருளாகி வருகிறது. இந்த ரகசியத்தையும் இதுவரை அவர் கூறாமல் சிதம்பர ரகசியம் போல காத்து வருகிறார். அப்படி அவர் உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டு காலை எல்லாம் மடக்கி அதில் ஷூ போட்டு குள்ளமாக மாறி நடித்தார் என்பது தெரிந்த விஷயம்.

Karakattakkaran

Karakattakkaran

இருந்தாலும் அதை எல்லாம் அசால்டாக முறியடித்தார் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் தான் இந்த சாதனையைச் செய்தது. இது கமல் பட வசூலையும் தாண்டியது. கமல் படத்தைப் பொறுத்தவரை 100 நாள்களைக் கடந்து பல திரையரங்குகளில் ஓடியது. சில தியேட்டர்களில் 200 நாள்கள் வரை ஓடியுள்ளது. ஆனால் கரகாட்டக்காரன் படத்தைப் பொறுத்தவரை ஏ, பி, சி சென்டர்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஒரு வருடத்திற்கும் மேல் 385 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

அப்படி என்ன பெரியதாகச் செய்து விட்டார் ராமராஜன் என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில். அவர் வெறுமனே கரகத்தைத் தலையில் சுமந்து ஆடுவது போல பாவனை தான் செய்தார். அப்படின்னா படம் எப்படி சக்கை போடு போட்டதுன்னு கேட்கலாம். கரகாட்டக்காரன் படத்தை இயக்கியவர் கங்கை அமரன். பல திறமைகளுக்குச் சொந்தக்காரர்.

TM

TM

படத்தைப் பார்த்தால் தில்லானா மோகனாம்பாள் மாதிரி இருக்கும். படத்தில் இதை நிரூபிப்பது போல வசனத்தையே வைத்திருப்பார் கங்கை அமரன். இவங்களை எல்லாம் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜி, பத்மினி மாதிரியே இருக்குன்னு ஒரு வசனம் வரும். இரு படங்களிலும் கலைஞர்களுக்குள் வரும் காதலும், மோதலும் தான் கதை.

இந்தப்படத்துல இன்னொரு சூப்பர் விஷயம் வாழைப்பழ காமெடி. படத்தில் கவுண்டமணி டி.எஸ்.பாலையா போலவே கதாபாத்திரத்தை ஏற்று தன்னோட ஸ்டைலில் நடித்து இருப்பார். இடையிடையே சூப்பர்ஹிட் பாடலும், பைட்டும் இருந்ததால் படம் கமர்ஷியலாக ஹிட் அடித்தது.

ராமராஜன், கனகா காம்பினேஷன் நல்லா ஒர்க் அவுட்டானது. இருவரும் சிறப்பாக நடித்து இருப்பார்கள். ராமராஜனின் அம்மா காந்திமதியும் சூப்பராக நடித்து இருப்பார். பெரிய கருப்புத்தேவர், சந்தானபாரதி என நடித்தவர்கள் எல்லோருமே செம மாஸ் காட்டியிருந்தனர். கோவை சரளாவின் கேரக்டர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமா கேரக்டர் போல இருந்தது.

Next Story