More
Categories: latest news

கங்குவாவைக் காப்பாற்ற குடும்பமே போட்ட சதித்திட்டம்? பிரபலம் எழுப்பிய சூடான கேள்வி

கங்குவா படம் ரசிகர்களிடம் சரியாக வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை விட்டது. அதுல யாரும் முதல் நாள் முதல் காட்சிக்கு விமர்சனம் செய்யக்கூடாது. ரசிகர்கள் தியேட்டர் முன் இருந்து படம் எடுக்கக்கூடாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு தான் படத்திற்கான விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக கோர்ட்ல போய் தடை வாங்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தாங்க. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

ஜோதிகாவும் படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுல சூர்யாவின் கங்குவாவைக் காப்பாற்ற குடும்பமே போட்ட சதித்திட்டமும் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

Also read: போற போக்குல இப்படி கலாய்ச்சிடீங்களே பாய்!… சல்மான்கான் சொன்னது யாரென்னு தெரியுதா?!…

கங்குவா படம் ரிலீசுக்குப் பிறகு எழுதப்படாத சட்டம் கொண்டு வந்துருக்காங்கன்னே சொல்லலாம். யாரும் தியேட்டர் வாசல்ல நின்னு படத்தைப் பத்தி விமர்சனம் சொல்லக்கூடாது. பப்ளிக் ரிவியு கொடுக்கக்கூடாது. தியேட்டர் வாசல்ல நின்னு போட்டோ எடுக்கக்கூடாது. குறிப்பா எப்டிஎப்எஸ் பார்த்துட்டு யாரும் விமர்சனம் பண்ணக்கூடாது.

இது வந்து கருத்துரிமை. யாரும் தலையிட முடியாது. யாரும் ஒட்டுமொத்தமா சொல்லல. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து வந்த ஒரு அறிக்கை.

சொர்க்கவாசல் படத்தின் பிரஸ்மீட்ல ஆர்.ஜே.பாலாஜி இந்த கருத்துரிமை பற்றி பேசினார். ஒரு கடையில கம்பெனியில இருக்குற வரைக்கும் தான் அது பிஸ்கட். அதை வாங்கி சாப்பிட்டா சாப்பிடுறவன் என்ன வேணாலும் சொல்லலாம். சரியில்ல, உப்பு ஜாஸ்தியா இருக்கு.

நமத்துப் போச்சுன்னு என்ன வேணாலும் சொல்லலாம். அதே மாதிரி தான் சினிமாவும். படம் சரியில்லன்னா யாரு வேணாலும் அதைப் பத்திப் பேசலாம். இதை எல்லாம் மீறி நீங்க தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவங்ககிட்ட போனை பிடுங்கியா வச்சிக்குவீங்கன்னு கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குக் காரணம் என்னன்னா அந்தப் படத்தை வாங்கி விநியோகிப்பவர் எஸ்.ஆர்.பிரபு.

Kanguva

சில தினங்களுக்கு முன் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து ஒரு அறிக்கை விட்டுருந்தாங்க. கோர்ட்ல போய் தடை வாங்கணும். தியேட்டர் முன்னாடி மீடியாக்களை வரவிடக் கூடாது. வெளியூர்ல போய் ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் எல்லாம் போய் எப்டிஎப்எஸ் பார்த்துட்டு யாரும் ரிவியு சொல்லக்கூடாது.

இந்த லட்டர் பேடில் எஸ்.ஆர்.பிரபுவை டேக் பண்ணி விஜய் ரசிகர்கள் ஒரு விமர்சனம் போட்டுருந்தாங்க. உங்க கங்குவா படம். உங்க உறவினர் தான் சூர்யா. அதனால இப்படி ஒரு அறிக்கை விட்டீங்களான்னு கேட்டாங்க. ப்ளூசட்டமாறனும் கருத்து சுதந்திரத்துல நீங்க யாருங்க தலையிடுறதுன்னு கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போ அலெக்ஸ் பாண்டியனைக் கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தெறிக்க விட்டது. நடப்புத் தயாரிப்பு சங்க பொறுப்பாளர் தனஞ்செயன். அவர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரின்ல வேலை செய்றாரு. இந்த லட்டர் பேடில் பாரதிராஜாவின் டிஜிட்டல் கையெழுத்து போடப்பட்டுள்ளது.

அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் காதுக்கு இந்த விஷயம் எட்டியதா என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் அவரிடம் கையெழுத்தே வாங்காம இப்படி ஒரு அறிக்கையை விடலாமா? 350 ரூபா, 400 ரூபா கொடுத்து படம் பார்த்தவங்க நல்லா இல்லன்னு கொந்தளிச்சாங்க.

Also read: நீ எடுக்குற முடிவு மத்தவங்களுக்கு சந்தோஷம் தரணும்… உனக்கு அல்ல! ரஜினி சொன்னது யாருக்கு?

இப்போ வந்து ஒரு தயாரிப்பாளர் சங்க லட்டர் பேடை உங்களோட சுயநலத்துக்காகப் பயன்படுத்தினீர்கள் என்றால் அது எந்தளவுக்கு நியாயம்? என தனஞ்செயனுக்குக் கேள்வி எழுப்பி உள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

Published by
sankaran v

Recent Posts