கேளடி கண்மணி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இது இயக்குனர் வசந்த்துக்கு முதல் படம். இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் உதவி இயக்குனர். இவரோட முதல் படத்துக்கு ரஜினியோ, கமலோ யாரைக் கேட்டாலும் நடித்துக் கொடுத்து இருப்பார்கள். ஆனால் தன்னோட முதல் படத்தில் எஸ்.பி.பி.தான் நடிக்கணும் என்று பிடிவாதமாக இருந்தாராம் வசந்த்.
முதலில் எனக்கு இது தேவையா? இது எடுபடுமா? அதன்பிறகு இயக்குனர் விடாப்பிடியாக இருந்ததால் நடிக்க சம்மதித்தாராம். படமும் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இந்தப் படம் இவ்வளவு வரவேற்பு பெறக்காரணம் இளையராஜாவும், எஸ்.பி.பி.யும் முக்கிய காரணம்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடல் மண்ணில் இந்தக் காதலன்றி எஸ்பிபி படத்தில் மூச்சுவிடாமல் பாடும் பாடல். புல்லாங்குழல் இசை அருமையாக இருக்கும். பாடல் முழுக்க பெண் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டு இருக்கும்.
பாடலில் முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும், கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும், சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றி வரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும் எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி, அத்தனையும் துறந்தால் அவன் தான் துறவி முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவா..? என்ற வரிகளை மூச்சுவிடாமல் படித்துப் பாருங்கள். படிக்கும்போதே நமக்கு மூச்சு வாங்குகிறது. பாடலைப் பாடினால் எப்படி இருக்கும்? இந்தப் பாடலிலும் எஸ்.பி.பி. பாடியதும் மூச்சு வாங்குவார்.
இதையும் படிங்க… ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.
இந்தப் பாடலை அந்தக்காலத்தில் டிராக் சிஸ்டத்தில் எடுத்தார்களாம். பாட வைத்து கரெக்டா ஒட்டி விட்டால் பாடல் மூச்சுவிடாமல் பாடியது போல வந்துவிடும். ஆனால் இந்தப் பாடலை இளையராஜா இதுவரை மூச்சுவிடாமல் பாடியதாகச் சொல்லவே இல்லையாம். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் இடம் பெற்ற ‘கண்மணியே காதல் என்பது’ பாடலைத் தான் எஸ்பிபி மூச்சு விடாமல் பாடினாராம். ஆனால் இந்தப் பாடலையும் சொல்கிறார்கள் என்கிறார் பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி.
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…