Connect with us
rahmsn

Cinema History

ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள்!.. இந்தப் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

New Movie: தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா ஒரு தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார்.உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக மாறிய எஸ்,ஜே.சூர்யா தான் எடுத்த இரண்டு படங்களையுமே ரசிகர்களிடம் ஆழமாக கொண்டு போய் சேர்த்தார்.

இன்று தமிழ் சினிமாவில் மாபெரும் தூண்களாக இருக்கும் விஜய், அஜித் இவர்களை வைத்து என்றுமே மறக்க முடியாத வகையில் தரமான படங்களை கொடுத்து அவர்களின் கெரியருக்கும் ஒரு பலமான அஸ்திவாரத்தை போட்டார். ஆனால் அவருக்கு அடிப்படையில் ஒரு  நடிகராக வேண்டும் என்பதுதான் ஆசை.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் படத்தை டிராப் செய்கிறாரா ரஜினிகாந்த்!.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..

அதனால் ஹீரோவாக களமிறங்கிய எஸ்.ஜே.சூர்யா ஒரு சில படங்களில் ஹீரோவாக ஜொலிக்க ஆரம்பித்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் கில்மா படங்களாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. அதனால் எஸ்.ஜே.சூர்யாவை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அந்த வகையில் அவர் நடித்த கில்மா நகைச்சுவை படமான நியூ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் இந்தப் படத்தை எந்த ஓடிடியிலும் டிவியிலும் பார்க்கவே முடியாது.

இதையும் படிங்க: மிஷ்கின் ஒரு டெவில்!.. அவனுக்கு முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்லை!.. பாராட்டிய பாலா!..

2004 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றிபெற்றாலும் 2005 ஆம் ஆண்டு இந்தப் படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா கைது செய்யப்பட்டார். இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தும் அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தில் அமைந்த ‘கும்பகோணம் சந்தையிலே’ என்ற பாடலை வைக்கக் கூடாது என சென்சார் நேரத்தில் ஒரு லேடி சொல்லியிருக்கிறார்.

அதனால் கோவத்தில் அந்த லேடி முன் தனது செல்போனை தூக்கி எறிந்தாராம் எஸ்.ஜே. சூர்யா. அதன் காரணமாகவே எஸ்.ஜே. சூர்யா மீது அந்த லேடி புகார் அளித்ததன் பேரில் கைது செய்யப்பட்டு அதன் பின் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கோயிலில் நுழைய எம்ஜிஆர் பட இயக்குனருக்கு போடப்பட்ட தடை! அதையும் மீறி எப்படி படமாக்கினார் தெரியுமா?

இருந்தாலும் 2006 ஆம் ஆண்டு மீண்டும் எஸ்.ஜே. சூர்யா கைது செய்யப்பட்டாராம். இது எதற்கு என்றால் சென்சாரில் சில காட்சிகளை நீக்கச் சொல்லியும் அந்த காட்சிகளை அதன் பட ப்ரோமோஷனில் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டாராம்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top