சினிமாவை நம்பினா வேலைக்கு ஆவாது!..சத்தமில்லாமல் டிராக்கை மாற்றும் நட்சத்திரங்கள்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் முன்னனி நடிகர்களின் ஆதிக்கம் தான் மேலோங்கி நிற்கின்றது. அதிலும் சிறிய தயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள் ஏன் இயக்குனர்கள் உட்பட பெரிய பெரிய ஹீரோக்களை நம்பி தான் பணத்தை இறைக்கின்றனர்.
எவ்வளவோ திறமை இருந்தும் சிறிய நடிகர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. முன்னனி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் எத்தனையோ புதுமுக நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் ஏராளமானோரை நாம் பார்க்க முடிகின்றது. ஆனால் அவர்களுக்கு உரிய போதிய வாய்ப்புகள் சரிவர அமைவதில்லை.
அந்த மாதிரி நடிகர்கள் நடிகைகளுக்காக ஒரு வரம் போல் வந்தது தான் வெப் சீரிஸ் நிறுவனம். இதை நம்பி ஏராளமான கலைஞர்கள் இருக்கின்றனர். எத்தனையோ தரமான படங்கள் இந்த வெப் சீரிஸில் நாம் பார்க்கலாம். உதாரணமாக விலங்கு, குற்றம் குற்றமே, தமிழ் ராக்கர்ஸ், பேப்பர் ராக்கெட் போன்ற பல வெப் சீரிஸ் திரைப்படங்கள் இருக்கின்றன.
இந்த வகையில் நடிகர் ஆர்யா, நடிகை ஹன்சிகா, நடிகர் நாசர் போன்றோரும் இந்த பாதையில் இறங்கியிருக்கின்றனர். ஆர்யாவின் வில்லேஜ், ஹன்சிகாவில் மை த்ரி போன்றவை தயாராகி கொண்டிருக்கின்றன. மக்களுக்கும் திரையில் பார்க்க கூடிய படங்களை விட வெப் சீரிஸில் வரும் படங்களை தான் அதிகம் விரும்புகின்றன. மேலும் த்ரில்லர் கலந்த படங்களாக அமைவதால் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க கூடியதாக இருக்கின்றன.