சான்சே இல்லை!

20 வயசுக்கு மாறிய குஷ்பு…

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் குஷ்பு. 90-களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்.

இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் தமிழகத்தில் நடந்தது. 90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர்.

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்தியராஜ் என அப்போதையை முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர்.

குறிப்பாக பிரபுவுடன் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட் ஆனது.

கதாநாயகி இடத்திலிருந்து ரிட்டயர்டு ஆகும் போது அரசியலில் இறங்கினார். திமுகவில் இணைந்த அவர் அதன்பின் அக்கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். எந்த பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தாரோ அதிலேயே தன்னை இணைத்துக்கொண்டார்.

மேலும், தனது உடலை உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் குறைத்து 90களில் இருந்த அழகுக்கு தற்போது திரும்பியுள்ளார்.

இந்நிலையில், Dance Vs Dance என்கிற தொலைக்காட்சியை அவர் நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக மாடர்ன் உடையை அணிந்து அவர் எடுத்த செல்பி புகைப்படங்களை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவர் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அந்த தோற்றத்தில் இருக்கிறார்.

குஷ்புவின் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.