செம்பருத்தி சீரியலில் மீண்டும் பழைய ஆதி.. !

ஜீ தமிழில் மிகவும் ஹிட் அடித்த சீரியல் என்றால் அது செம்பருத்தி.

இதற்கு முக்கிய காரணம் பார்வதி கேரக்டரில் நடித்த ஷபானா மற்றும் ஆதி கதாபாத்திரத்தில் முதலில் நடித்த கார்த்திக் ராஜ்.

இவர்கள் இருவர் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அது சீரியல் செம்பருத்தி ஹிட் அடிக்க பெரும் அளவு உதவியது.

வீட்டு வேலை செய்யும் பெண்ணை அம்மாவுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும் நாயகன். 

அதன் பின் அம்மாவுக்குத் தெரிய வர ஏற்படும் பிரச்சனைகள் என செம்பருத்தி சீரியல் சுவாரஸ்யமாகவும் சென்றுகொண்டு இருந்தது.

ஆனால் திடீரென ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியும் இவரது இழப்பைச் சமுக வலைத்தள பதிவு மூலம் உறுதி செய்தது.

பின்னர் ஆதி கதாபாத்திரத்தில் விஜே அக்னி நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு சீரியலில் இப்போது அவ்வளவு முக்கியத்துவமும் இல்லை.

நாளுக்கு நாள் செம்பருத்தி சீரியல் சுவாரஸ்யம் இழந்து வருவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 4-ம் தேதி முதல் செம்பருத்தி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

காலை 8 மணி முதல் 9:30 மணி வரை செம்பருத்தி சீரிய மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.